தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குடியிருப்புப் பேட்டை நிர்வாகத்தில் எல்லா நகர மன்றங்களுக்கும் சிறந்த மதிப்பீடு

2 mins read
bfe28359-d32a-4da0-9093-d377c2ec6c80
குடியிருப்புத் தூய்மை, குடியிருப்புப் பராமரிப்பு, மின்தூக்கி இயக்கம், சேவைக் கட்டண பாக்கியை நிர்வகிக்கும்முறை ஆகிய நான்கு அம்சங்களில் மதிப்பீடு செய்யப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

2025 பொதுத்தேர்தலுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட செயல்திறன் மறுஆய்வில் 17 நகர மன்றங்களும் குடியிருப்புப் பேட்டை நிர்வாகத்தில் சிறந்த தரநிலைகளைப் பெற்றுள்ளன.

நான்கு பிரிவுகளின்கீழ் அவை மதிப்பீடு செய்யப்பட்டதாகத் தேசிய வளர்ச்சி அமைச்சு வெள்ளிக்கிழமை (ஜூன் 13) வெளியிட்ட நகர மன்ற நிர்வாக அறிக்கை தெரிவிக்கிறது.

2024 நிதியாண்டில் ஏப்ரல் 2024 முதல் மார்ச் 2025 வரையிலான விவரங்களை இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

2023 நிதியாண்டில் வெளிவந்த அறிக்கைகளின்படி சிறந்த தரநிலைகளைப்பெற்ற நகர மன்றங்கள் தொடர்ந்து அந்தத் தரநிலைகளைத் தக்கவைத்துள்ளன. 

இந்த அறிக்கைகள் 2010 முதல் வெளியீடு கண்டன. அறிக்கை குறிப்பிடும் தரநிலைகளில் பச்சை ஆக உயர்வாக உள்ளது. அதற்கு அடுத்த நிலையில் மஞ்சள், சிவப்பு ஆகிய தரநிலைகள் உள்ளன. 

குடியிருப்புத் தூய்மை, குடியிருப்புப் பராமரிப்பு, மின்தூக்கி இயக்கம், சேவைக் கட்டண பாக்கியை நிர்வகிக்கும் முறை ஆகிய நான்கு அம்சங்களில் மதிப்பீடு செய்யப்படுகிறது.

குடியிருப்புத் தூய்மைக்கும் பராமரிப்புக்கும் பச்சைத் தரநிலைகளை ஈட்டுவதற்கு நகர மன்றம், ஒரு புளோக்கிற்கு நான்கிற்குக் குறைவான பிரச்சினைகள் மட்டுமே அடையாளம் காணப்பட்டிருக்க வேண்டும்.

கறை, குப்பை, கனமான பொருள்கள், சுவற்றுக்கிறுக்கல் ஆகியவை தூய்மைக்கேடுகளாகக் கருதப்படுகின்றன. கறைகளும் குப்பையும் நகர மன்றங்களில் தூய்மைக்குத் தொடர்ந்து கேடு விளைவிக்கும் முக்கிய பிரச்சினைகளாக உள்ளன.

குடியிருப்புப் பராமரிப்பைப் பொறுத்தவரையில், பொது இடங்கள் மறைக்கப்படுவது தொடர்ந்து முக்கியப் பிரச்சினையாக உள்ளது.

அதிகாரபூர்வமற்ற பழுதுபார்ப்புப் பணிகள், சேதமடைந்த காரைப்பூச்சு உள்ளிட்டவை, அடையாளம் காணப்பட்ட மற்றப் பிரச்சினையாக உள்ளது.

ஒவ்வொரு பத்து மின்தூக்கிகளுக்கு இரண்டுக்கும் குறைவான மின்தூக்கிகளில் பழுது இருந்தால் மின்தூக்கி இயக்கம் சிறந்த தரநிலையில் இயங்குவதாக மதிப்பிடப்படுகிறது.

2025ன் இறுதியில் நகர மன்றங்களின் வர்த்தக நிர்வாகத்தையும் உள்கட்டுப்பாடுகளையும் மறுஆய்வு செய்யும் தனிப்பட்ட அறிக்கை வெளியிடப்படும்.

நகர மன்றத்தின் தணிக்கை செய்யப்பட்ட நிதியறிக்கைகளை தேசிய வளர்ச்சி அமைச்சு பெற்று மறுஆய்வு செய்யப்பட்ட பிறகு அந்த அறிக்கை வெளிவரும்.

செயலாக்க, நிர்வாக அறிக்கைகளை தேசிய வளர்ச்சி அமைச்சு வரும் நிதியாண்டில் வெளியிடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்