தியோங் பாரு ரயில் நிலையத்தின் மின்படிக்கட்டில் மூவர் காயமடைந்துள்ளனர்.
மதர்ஷிப் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில், ரயில் நிலைய ஊழியர்கள் உடனடியாக உதவி வழங்கியதாகவும் சோதனைகளுக்காக மின்படிக்கட்டின் செயல்பாட்டை நிறுத்தியதாகவும் ‘எஸ்எம்ஆர்டி ரயில்கள்’ தலைவர் லாம் ஷியாவ் காய் கூறினார்.
மூவரில் ஒருவர் தள்ளாடி, தமக்குப் பின்னால் இருந்த இரண்டு பேரின்மீது விழுந்ததாக லாம் சொன்னார்.
மின்படிக்கட்டில் தொழில்நுட்பப் பிரச்சினைகள் இல்லாததை உறுதிசெய்ததைத் தொடர்ந்து, அது மீண்டும் செயல்படத் தொடங்கியது.
மதர்ஷிப் வாசகர் பகிர்ந்துகொண்ட படம் ஒன்றில், இரண்டு பெண்கள் மின்படிக்கட்டில் அமர்ந்திருந்ததையும் அவர்களில் ஒருவரின் கைகளில் ரத்தம் கசிந்ததையும் காணமுடிந்தது.
காயமடைந்த மூவருக்கு முதலுதவி வழங்கப்பட்டதாக லாம் கூறினார். இரண்டு பேர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். சிறு காயங்கள் ஏற்பட்ட மற்றொருவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்தார்.