பிடோக் ரிசர்வோர் ரோட்டில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) ஐந்து வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டன. அதனால் இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்துகுறித்து அன்று மாலை 4.30 மணிவாக்கில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது.
விபத்தில் நான்கு கார்கள் மற்றும் கனரக வாகனம் ஒன்றும் சிக்கின. ஒரு காரில் இருந்த 36 வயது பெண் ஓட்டுநரும் 37 வயது பெண் பயணியும் சாங்கிப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்படும்போது அவர்கள் இருவரும் சுயநினைவுடன் இருந்தனர்.
39 வயது ஆண் கார் ஓட்டுநர் விசாரணைக்கு உதவிவருகிறார். காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.
விபத்து தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. அதில் கறுப்பு நிறக் கார் ஒன்றின் பின்பகுதி சேதமடைந்திருந்தது. வெள்ளை நிறக் காரின் முன்பகுதியும் சேதமடைந்திருந்தது. சாலையில் வாகனங்களின் சிதைவுகளும் சிதறிக்கிடந்தன.

