சிலேத்தார் விரைவுச்சாலையில் விபத்து: நால்வர் மருத்துவமனையில்

1 mins read
febf1d8b-dd77-4d17-abf6-60f21f31a0bf
காணொளியில் மோட்டார் சைக்கிளும் காரும் சாலைத் தடுப்புமீது மோதி இருந்தன. காரில் சக்கரம் ஒன்று இல்லாமல் இருந்தது. - படம்: சமூக ஊடகம்

சிலேத்தார் விரைவுச்சாலையில் கார், மோட்டார் சைக்கிள், டாக்சி ஆகியவை விபத்தில் சிக்கின. இதில் நால்வர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

விபத்து புதன்கிழமை (நவம்பர் 26) புக்கிட் தீமா விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் பாதையில் உள்ள லென்டர் அவென்யூ வெளியேறும் பாதைக்கு முன் நேர்ந்தது.

சம்பவம் குறித்து பிற்பகல் 1.20 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்து, அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகக் காவல்துறை அதிகாரிகள் கூறினர்.

70 வயது டாக்சி ஓட்டுநர், டாக்சியில் இருந்த 17 வயது பயணி, 43 வயது மோட்டார் சைக்கிளோட்டி, 36 வயது கார் ஓட்டுநர் ஆகியோர் கூ டெக் புவாட் மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது சுயநினைவுடன் இருந்தனர் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

விபத்து தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. காணொளியில் மோட்டார் சைக்கிளும் காரும் சாலைத் தடுப்புமீது மோதி இருந்தன. காரில் சக்கரம் ஒன்று இல்லாமல் இருந்தது. சாலையில் வாகனங்களின் பாகங்களும் கிடந்தன.

காவல்துறை விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்