சிங்கப்பூர் வங்கிகள் சங்கத்தின் மோசடித் தடுப்புச் சின்னம் அறிமுகம்

1 mins read
645f3ae4-8df3-4f88-901a-4b0d18eff4d4
நவம்பர் 6ஆம் தேதியன்று சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடைபெற்ற சிங்கப்பூர் ஃபின்டெக் விழாவில் மோசடித் தடுப்புச் சின்னமான ‘கேனி’ பச்சோந்தி (வலது) அறிமுகப்படுத்தப்பட்டது. - படம்: சிங்கப்பூர் வங்கிகள் சங்கம்

சிங்கப்பூர் வங்கிகள் சங்கம் அதன் மோசடித் தடுப்புச் சின்னத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

பச்சோந்தியைச் சின்னமாக சங்கம் தேர்ந்தெடுத்துள்ளது.

அதற்கு ‘கேனி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

நவம்பர் 6ஆம் தேதியன்று சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடைபெற்ற சிங்கப்பூர் ஃபின்டெக் விழாவில் இச்சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஜூன் மாதம் நடைபெற்ற சிங்கப்பூர் வங்கிகள் சங்கம் மோசடித் தடுப்புச் சின்ன வடிவமைப்புப் போட்டியில் ‘கேனி’ பச்சோந்தி வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டது.

இச்சின்னத்தை 10 வயது கொன்ஸ்டன்ஸ் ஆம்பிரே லே கிரான்ட் டி மெர்சி வடிவமைத்தார்.

தொடக்கப்பள்ளிகளிலும் உயர்நிலைப்பள்ளிகளிலும் விளையாட்டுகள், புதிர்ப்போட்டிகள் ஆகியவற்றுடனான மோசடித் தடுப்பு நாடகங்களை நடத்த ACT 3 நாடகக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

“இளம் வயதிலேயே மோசடித் தடுப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்குத் தெரிய வேண்டும். அது பற்றி அவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு எடுத்துரைக்க வேண்டும்,” என்று சங்கத்தின் இயக்குநர் ஓங் ஆங் ஐ பூன் தெரிவித்தார்.

டிபிஎஸ் வங்கி, பிஓஎஸ்பி, யுஓபி ஆகிய வங்கிகள் தங்கள் மோசடித் தடுப்பு முயற்சிகளில் ‘கேனி’ பச்சோந்தியைப் பயன்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்