பிரான்சில் விருது வென்ற சிங்கப்பூர் உயிரோவியத் திரைப்படம்

காலனித்துவ காலத்தின் கதையான ‘த வயலினிஸ்ட்’

பிரான்சில் விருது வென்ற சிங்கப்பூர் உயிரோவியத் திரைப்படம்

படம்: ரோபோட் பிளேக்ரவுண்ட் மீடியா

28 Jun 2026 - 7:13 pm

2 mins read

பிரான்சின் ஆன்சி நகரில் 50வது ஆன்சி அனைத்துலக  உயிரோவியத் திரைப்பட விழாவில், ‘த வயலினிஸ்ட்’ திரைப்படம் உயரிய விருதை வென்றுள்ளது.

உயிரோவியத் துறையில் ஆகப்பெரிய விருதாகக் கருதப்படும் ‘கிரிஸ்டல்’ விருதை வென்ற சிங்கப்பூரின் முதல் உயிரோவியத் திரைப்படம் உள்ளது.

ஜூன் 21 முதல் 27 வரை நடைபெற்ற இந்தத் திரைப்பட விழாவின் 66 ஆண்டுகால வரலாற்றில், முதன்மைப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சிங்கப்பூர்ப் படைப்பு என்ற பெருமையை ‘த வயலினிஸ்ட்’ திரைப்படம் பெற்றது.

2026 ஆன்சி அனைத்துலகத் திரைப்பட விழாவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிங்கப்பூர் உயிரோவியத் திரைப்படமான ‘த வயலினிஸ்ட்’ (The Violinist), மலாயா மீதான ஜப்பானிய ஆக்கிரமிப்பைப் பின்னணியாகக் கொண்டுள்ளது.
2026 ஆன்சி அனைத்துலகத் திரைப்பட விழாவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிங்கப்பூர் உயிரோவியத் திரைப்படமான ‘த வயலினிஸ்ட்’ (The Violinist), மலாயா மீதான ஜப்பானிய ஆக்கிரமிப்பைப் பின்னணியாகக் கொண்டுள்ளது. - படம்: ரோபோட் பிளேக்ரவுண்ட் மீடியா

காலனித்துவச் சிங்கப்பூர், ஜப்பானிய ஆக்கிரமிப்பு அதற்குப் பிந்தைய ஆண்டுகளின் பின்னணியைக் கொண்டு கையால் வரையப்பட்ட இந்தக் கதையை, சிங்கப்பூரரான எர்வின் ஹானும் ஸ்பெயின் உயிரோவியக் கலைஞரான ராவுல் கார்சியாவும் இணைந்து இயக்கியுள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூர்த் திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ள ‘த வயலினிஸ்ட்’ திரைப்படத்தை, ‘சிங்கப்பூரின் ரோபோட் பிளேகிரவுண்ட் மீடியா’, ஸ்பெயினின் ‘டிவி ஆன் புரொடக்‌ஷியோனெஸ்’, இத்தாலியின் ‘அல்ட்ரி ஓச்சி’ ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன.

இதற்குச் சிங்கப்பூரின் தகவல் தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம் மூன்று நாடுகளையும் சேர்ந்த பிற பொது அமைப்புகளும் ஒளிபரப்பு நிறுவனங்களும் ஆதரவளித்துள்ளன.

இரண்டாம் உலகப் போருக்கு முன்பு இடம்பெறும்  இந்தக் கதை, பிரனக்கான் குடும்பத்தைச் சேர்ந்த வயலின் கலைஞரான ‘ஃபெய்’ மற்றும் அவரது நெருங்கிய நண்பர் காய் ஆகியோரைச் சுற்றி நகர்கிறது. 

1941ல் சிங்கப்பூர் மீதான ஜப்பானியப் படையெடுப்புக்குப் பிறகு, காய் எதிர்ப்புப் படையில் இணைகிறார். ஆனால், போருக்குப் பிறகு அவர் மாயமாகிறார். 

காணாமல்போன தனது நண்பரைத் தேடியபடி, இப்பகுதி முழுவதும் பல்லாண்டுகளுக்கு முன்பு தனது வயலின் இசை நிகழ்ச்சிகளை ஃபெய் நடத்துகிறார். அவரது இந்தப் பயணம் துயரமும் அதே வேளையில் நம்பிக்கையும் நிறைந்தது.

டான் கெங் ஹுவா, ஏட்ரியன் பாங், எய்டன் சங், ஃபாங் ரோங் உள்ளிட்ட சிங்கப்பூர் நடிகர்கள் இந்தக் கதாபாத்திரங்களுக்குப் பின்னணிக் குரல் கொடுத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
திரைப்படம்பிரான்ஸ்உயிரோவியம்விருது