பொங்கோலில் பூப்பந்து வீரர் லோக்குப் புதிய வீடு

பொங்கோலில் பூப்பந்து வீரர் லோக்குப் புதிய வீடு

1 mins read
aca7cbf1-9395-4be3-a3c5-58999f946529
நெடுநாள் கனவு நனவானதை நினைத்து 29 வயது லோ கியென் யூவுக்கு மகிழ்ச்சி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் தேசியப் பூப்பந்து வீரர் லோ கியென் யூ, பல ஆண்டுகள் வாடகை வீட்டில் இருந்து தற்போது சொந்த வீட்டின் உரிமையாளராகியுள்ளார்.

ஜூன் 8ல் வெளியிட்ட இன்ஸ்டகிராம் பதிவின்வழி லோ இதனைக் கூறினார்.

புதிய வீட்டின் சிறு தோற்றத்தைப் பகிர்ந்துகொண்ட லோ, தனக்கென்று ஒரு சொந்த வீடு வாங்குவது சிறு வயதிலிருந்தே கனவாக இருந்து வருவதாகக் கூறினார்.

பினாங்கில் பிறந்த லோ, 13 வயதில் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த தமக்கு பெரும்பாலும் வாடகை அறைகளே வீடாக இருந்ததாகக் கூறினார்.

“நானும் எனது சகோதரரும் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை வீட்டை மாற்றிக்கொண்டே இருப்போம். குத்தகை முடிவடைந்ததாலோ, சில சமயங்களில் எங்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய வேறு ஓர் இடம் கிடைத்ததாலோ மாறுவோம்,” என்று அவர் கூறினார்.

இரண்டு முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றவரும், முன்னாள் ஆடவர் ஒற்றையர் பிரிவின் உலக வெற்றியாளராகவும் லோ திகழ்கிறார்.

சிங்கப்பூரில் சொந்த வீடு வாங்குவது எப்போதுமே பெரிய இலக்காகக் கருதப்படுவதாக லோ குறிப்பிட்டார்.

“காலம் கடந்து இன்று, 29 வயதில் எனக்கென்று ஒரு குடும்பமும், வீடு என்று சொல்லிக்கொள்ள ஓர் இடமும் இருக்கிறது,” என்று அவர் தமது பதிவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்