வாகன ஓட்டுநர் ஒருவரிடம் உரிமத் தேர்வை கடப்பதற்கு $150 லஞ்சம் பெற முயன்ற முன்னாள் தேர்வு அதிகாரிமீது லஞ்சக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
‘பீப்பள் அட்வான்டேஜ்’ எனும் நிறுவனத்தால் புக்கிட் பாத்தோக் வாகன ஓட்டுநர் பயிற்சி நிலையத்தில் சிங்கப்பூரரான 39 வயது முகம்மது ஸஹிரி இஷாக் பணியமர்த்தப்பட்டிருந்தார்.
கடந்த மே மாதம் 23ஆம் தேதி, தன்னிடம் தேர்வுக்கு வந்திருந்த பயிற்சி வாகன ஓட்டுநர் ஒருவரிடம் கடுமையாக இல்லாமல் வளைந்துகொடுத்து உதவிட அவர் லஞ்சம் கேட்டுள்ளார். தற்போது அப்பணியில் இல்லாத முகம்மது ஸஹிரி ஒரு லஞ்சக் குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்.
வருகின்ற 2026ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி குற்றத்தை ஒப்புக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
லஞ்சம் வாங்கிய குற்றம் நீரூபிக்கப்பட்டால், ஒருவருக்கு ஐந்து ஆண்டு சிறை, $100,000 அபராதம் அல்லது இரு தண்டனைகளும் ஒரே நேரத்தில் வழங்கப்படலாம்.

