அமைதிக் காலத்தில் மீள்திறனைக் கட்டியெழுப்பியதால், ‘சேட்ஸ்’ வருவாய் பெருகியது

அமைதிக் காலத்தில் மீள்திறனைக் கட்டியெழுப்பியதால், ‘சேட்ஸ்’ வருவாய் பெருகியது

2 mins read
1592995b-dd50-470b-8942-46bcf85b78c9
27 நாடுகளில் உள்ள 225 இடங்களில் சேட்ஸ் நிறுவனம் இயங்குவதால், அதன் அனைத்துலக கட்டமைப்பு வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது என்று அதன் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கெர்ரி மோக் கூறினார். - படம்: சாவ்பாவ்

மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை முடக்கி, செயல்பாடுகளைச் சீர்குலைத்த போதிலும், திசை திருப்பப்பட்ட சரக்குகளைக் கையாள, விமானப் போக்குவரத்துத் தரைவழி கையாளுநரான ‘சேட்ஸ்’ (SATS) நன்கு தயாராக இருந்தது.

வான்வெளி மூடப்பட்டதாலும், விமானங்கள் போர்ப் பகுதிகளைத் தவிர்த்ததாலும், சரக்குகள் உலகின் வெவ்வேறு பகுதிகளை இணைக்கும் மற்ற முக்கிய மையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன.

27 நாடுகளில் உள்ள 225 இடங்களில் சேட்ஸ் நிறுவனம் இயங்குவதால், அதன் அனைத்துலக கட்டமைமைப்பு வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது என்று அதன் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கெர்ரி மோக், செவ்வாய்க்கிழமையன்று (மே 26) நிறுவனத்தின் வருவாய் விளக்கக் கூட்டத்தில் கூறினார்.

“சரக்குகள் குறைந்த எதிர்ப்புள்ள பாதையை நோக்கிச் செல்கின்றன என்பதால், சிங்கப்பூரும் இதேபோல் பயனடைந்துள்ளது,” என்று அவர் கூறினார்.

போரால் ஏற்பட்ட அதிகரித்த சரக்கு அளவுகளைச் சமாளிக்க, களத்தில் உள்ள ஊழியர்கள் விரைவாகத் தங்களைத் தகவமைத்துக் கொள்ள வேண்டியிருந்த வேளையில், சேட்ஸ் நிறுவனம் இதுபோன்ற ஒரு சூழ்நிலையை மிக முன்னதாகவே எதிர்பார்த்திருந்தது.

தங்கள் நிறுவனம் ஒரு நீண்டகால உத்திசார் அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதாக விவரித்த திரு மோக், “மீள்திறன் என்பது அமைதிக் காலத்தில்தான் உருவாக்கப்படுகிறது. நாங்கள் எங்கள் திறனைத் திட்டமிடும்போது, ​​அது எப்போதும் எதிர்காலத்தைப் பற்றியதாகவே இருக்கும்,” என்றார்.

2025, ஆகஸ்ட்டில் சாங்கி விமான நிலையத்தில் திறக்கப்பட்டு, வெளிச்செல்லும் விமான சரக்குகளை வேகமாகச் செயலாக்கக்கூடிய மொத்த ஒருங்கிணைப்புத் திட்டக் கையாளுதல் மையத்தை மேற்கோள் காட்டி, இத்தகைய முதலீடுகள் சேட்ஸ்-இன் நீண்டகாலக் கருத்தாய்வுகளைப் பிரதிபலிக்கின்றன என்று அவர் கூறினார்.

“இதுபோன்ற சம்பவம் நடக்கும்போது, ​​உங்களுக்கு அந்தத் திறன் இருக்க வேண்டும். அது உங்களிடம் இல்லையென்றால், நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.

மேலும், மத்திய கிழக்கில் நடைபெறும் புனரமைப்புப் பணிகளின் காரணமாக, தொழில்துறை உபகரணங்களும் பொருள்களும் அமெரிக்காவிலிருந்து அப்பகுதிக்கு விமானம் மூலம் கொண்டுவரப்படுகின்றன. இந்தத் தளவாடப் பணிகளை சேட்ஸ்-இன் துணை நிறுவனமான வேர்ல்டுவைட் ஃப்ளைட் சர்வீசஸ் கையாளுகிறது.

இந்த உலகளாவிய கட்டமைப்புதான் சேட்ஸ்-இன் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய உந்துசக்தியாக இருந்துள்ளது. இது, 2025, ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை நீடித்த 2026 நிதியாண்டில், $6.35 பில்லியன் என்ற சாதனை அளவிலான வருவாயைப் பதிவு செய்தது என்றும் திரு மோக் விவரித்தார்.

குறிப்புச் சொற்கள்
சரக்குவிமானப் போக்குவரத்துவருவாய்போர்