பேருந்து காப்பி: 2,000 போக்குவரத்து ஊழியர்களுக்கு காப்பியுடன் நொறுக்குத்தீனி

1 mins read
dd66a864-4696-4741-9f6f-3737d6bab3f6
பழைய காலத்து பேருந்து போல் உள்ள நடமாடும் காப்பி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஏறக்குறைய 2,000க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்களுக்கு 12 வெவ்வேறு இடங்களில் அடுத்த மூன்று வாரங்களுக்கு காப்பியுடன் நொறுக்குத்தீனி வழங்கப்படவிருக்கிறது.

இதற்காக நடமாடும் பேருந்து ஒன்று தீவு முழுவதும் பயணம் செய்யவிருக்கிறது.

தேசிய போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் (என்டிடபிள்யூயு) ஏற்பாட்டில் இது இடம்பெறுகிறது.

வேலை இடைவெளியில் ஊழியர்களுக்கு காப்பி மற்றும் நொறுக்குத்தீனியை கட்டுப்படியாகக் கூடியவிலையில் வழங்க 1970களில் இந்தத்திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர், இது, 1981ல் என்டிடபிள்யூயுவின் உணவகங்களாக மாற்றப்பட்டன.

இந்நிலையில் எஸ்ஜி60 மற்றும் மே தினத்தையொட்டி போக்குவரத்து ஊழியர்கள் ஆற்றிய பங்கையும் சேவைகளையும் அங்கீகரிக்கும் வகையில் தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் புதிய பேருந்து காப்பி முயற்சியைத் தொடங்கியுள்ளது.

1970களில் இருந்த பழைய பேருந்தைப் போல இருக்கும், அந்தப் பேருந்து புதன் கிழமை ( மே 14) அன்று நடந்த தொடக்க விழாவில் வெளியிடப்பட்டது.

இதில் போக்குவரத்து துணை அமைச்சர் திரு. முரளி பிள்ளை கலந்து கொண்டார்.

இந்தப் பேருந்தில் சிறிய காட்சியகமும் இடம்பெற்றுள்ளது. சிங்கப்பூர் பொதுப் போக்குவரத்தின் வரலாறு, பழைய பேருந்துகளின் சீட்டுகள், ஓட்டுநர் சீருடை உள்ளிட்டவை அதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அடுத்த மூன்று வாரங்களுக்கு பொங்கோல், புக்கிட் மேரா, தெம்பனிஸ் உள்ளிட்ட பகுதிகளில் சுறுசுறுப்புடன் இயங்கும் பேருந்து, ரயில் நிலையங்களின் வழியிலும் பயணம் செய்யும். சிங்கப்பூருக்கு பொதுப் போக்குவரத்து ஊழியர்கள் ஆற்றிய பங்கை அறிந்துகொள்வதற்காக சில இடங்களில் பொது மக்களுக்கும் பேருந்து திறந்திருக்கும்.

தோ பாயோ எம்ஆர்டி நிலையத்தில் மே 14ஆம் தேதி நிர்வாகிகள், ஊழியர்களுடன் காப்பி குடித்த அமைச்சர் முரளி பிள்ளை.
தோ பாயோ எம்ஆர்டி நிலையத்தில் மே 14ஆம் தேதி நிர்வாகிகள், ஊழியர்களுடன் காப்பி குடித்த அமைச்சர் முரளி பிள்ளை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்