மரினா கோஸ்டல் விரைவுச்சாலையில் (எம்சிஇ) உள்ள சுரங்கப்பாதையில் கார் ஒன்று திடீரெனத் தீப்பற்றி எரிந்தது.
இச்சம்பவம் வியாழக்கிழமை (செப்டம்பர் 18) மாலை 6.40 மணிவாக்கில் நடந்தது.
போக்குவரத்து உச்ச நேரத்தில் இருக்கும் நேரத்தில் இச்சம்பவம் ஏற்பட்டதால் அச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சுரங்கப்பாதையில் தீ ஏற்பட்டதால் அங்கிருந்த தீயணைப்பு நீர்ப் பாய்ச்சிகள் நீரைப் பொழிந்தன. இரவு 7 மணிவாக்கில் சுரங்கம் 20 நிமிடங்களுக்கு மூடப்பட்டது.
இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
சம்பவம் குறித்த காணொளிகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.
தீ எதனால் ஏற்பட்டது என்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.