வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் 9.2% அதிகரிப்பு

1 mins read
91a556a1-5bfe-4d42-b01a-b602b0639eac
ஏ பிரிவு வாகனங்களுக்கான சிஓஇ 92,850 வெள்ளியைத் தொட்டுள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வாகன உரிமைச் சான்றிதழ்களுக்கான (சிஓஇ) ஏலத்தில் ‘ஏ’ பிரிவு வாகனங்களுக்கான கட்டணம் $92,850க்கு அதிகரித்தது.

பிப்ரவரி தொடக்கத்துடன் ஒப்பிடுகையில் அந்த கட்டணம் 9.2 விழுக்காடு கூடியது. ஜனவரியில் இடம்பெற்ற இரண்டாவது ஏலத்தில் இறங்குமுகமாகத் தொடங்கிய போக்கு தற்போது தலைகீழாக மாறியுள்ளது.

ஜனவரியில் அப்பிரிவுக்கான சிஓஇ $93,699லிருந்து $93,601க்குக் குறைந்தது. பிப்ரவரி 5ல் இந்தக் கட்டணம் $85,000க்கு சரிந்தது.

பிரிவு ‘ஏ’, சிறிய கார்கள், சக்தி குறைவான கார்களைப் பதிவு செய்ய பயன்படுத்தப்படுகிறது.

பெரிய, சக்திவாய்ந்த, மின்சாரக் கார்களுக்கான ‘பி’ பிரிவு சிஓஇ, இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்த $111,104லிருந்து 1.4 விழுக்காடு குறைந்து $109,598ல் முடிவடைந்தது.

பொதுப் பிரிவுக்கான சிஓஇ $2 கூடி $110,002ஆக முடிந்தது. இப்பிரிவில் மோட்டார்சைக்கிள் தவிர எந்தவொரு வாகனமும் பதிவு செய்யப்படலாம். ஆனால் பெரும்பாலும்பெரிய, சக்திவாய்ந்த கார்களுக்கு இது பயன்படுத்தப்படுகிறது.

வர்த்தக வாகனங்களுக்கான சிஓஇ (பிரிவு சி), முந்தைய ஏலத்தைவிட 4.3 விழுக்காடு கூடி S$65,189 ஆனது.

மோட்டார்சைக்கிள்களுக்கான சிஓஇ (பிரிவு டி) முந்தைய 8,289 கட்டணத்தைவிட 6.1 விழுக்காடு கூடி $8,791ல் முடிந்தது.

குறிப்புச் சொற்கள்