தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட் வைத்திருந்ததாக இளையர்மீது குற்றச்சாட்டு

2 mins read
b059b78c-a78f-4963-8f35-1e85e5d824dd
மின்சிகரெட்டுகள் தொடர்பிலான குற்றங்கள், ஆடவர் ஒருவரைத் தாக்கியது, மெட்டஃபெட்டமின் போதைப் பொருளை உட்கொண்டது ஆகிய குற்றச்சாட்டுகளை இளையர் எதிர்நோக்குகிறார். - படம்: சாவ்பாவ்

பொத்தோங் பாசிர் கழக வீட்டில் மார்ச் 6ஆம் தேதி மூன்று எட்டோமிடேட் கலந்த கேபோட் மின்சிகரெட்டுகளை வைத்திருந்ததாக நம்பப்படும் பதின்ம வயதினர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அந்த 19 வயது இளையரிடம் அதே வீட்டில் பயன்படுத்திய பிறகு வீசக்கூடிய மூன்று மின்சிகரெட்டுகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த மின்சிகரெட்டுகளை 2022, ஜனவரி 17லிருந்து இளையர் வைத்திருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது என்று நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.

ஆகஸ்ட் 14ஆம் தேதி நான்கு மின்சிகரெட் தொடர்பான குற்றச்சாட்டுகள் இளையர்மீது சுமத்தப்பட்டன. அதற்குமுன் அடுத்தவர்களைத் தாக்கியது, மெத்தம்ஃபெட்டமின் (methamphetamine) உட்கொண்டது ஆகியவை தொடர்பில் 14 குற்றச்சாட்டுகளை இளையர் எதிர்நோக்கினார்.

குற்றங்களைப் புரிந்தபோது இளையரின் வயது 18க்குக் கீழ் இருந்ததால் இளையரின் பெயரை வெளியிட முடியாது.

2022ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி பேஃபிரண்ட் லிங்கில் மின்சிகரெட் கருவியுடன் பிடிபட்டபோது இளையரின் வயது 16.

2023 செப்டம்பரில் இளையர் இன்ஸ்டகிராம் தளத்தில் பல மின்சிகரெட்டுகளை விற்பனைக்காக விளம்பரப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதற்கு அடுத்த மாதம் பொத்தோங் பாசிர் வீட்டில் இளையர்களிடம் நான்கு மின்சிகரெட் கருவிகள் இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

மின்சிகரெட் குற்றங்களைத் தவிர 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி ஆடவர் ஒருவரைத் தள்ளிவிட்டு அவரது முடியைப் பிடித்து இழுத்ததாகவும் இளையர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

2024 ஜூன் 4 அல்லது அதற்கு முன்னர் இளையர் மெத்தம்ஃபெட்டமின் போதைப் பொருளை உட்கொண்டதாகத் தெரிகிறது. கடந்த ஆண்டு மே முதல் ஜூன் வரை டெலிகிராம் தளத்தில் கைமுட்டிக் காப்பான் (Knuckle duster) ஆயுதத்தை இளையர் விற்க முயன்றதாக நம்பப்படுகிறது.

இளையரின் வழக்குக்கு முந்தைய கலந்துரையாடல் இம்மாதம் 18ஆம் தேதி இடம்பெறும்.

குறிப்புச் சொற்கள்