தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பல இன கலாசாரத்தை போற்றும் சிங்கே அணிவகுப்புக்கு புகைப்பட விருது

2 mins read
0fb2e2a1-bc84-4251-8ccc-d856e6bfd6d8
பல இனக் கலாசாரத்தைப் போற்றும் திரு கோ இங்கான் பின்னின் புகைப்பட விருது பெற்ற காட்சிப் படம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பல சிங்கே அணிவகுப்புகளில் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் பங்கேற்றவர் எஃப்1 கார் போட்டித் தடத்தில் காத்திருந்தார், சரியான புகைப்படக் காட்சிக்காக.

அதன் பிறகு, பல கலாசார பின்னணிகளைக் கொண்ட நடனக்காரர்கள், துடிப்புடன் வரிசையாக நிற்க, திரு கோ அவர்கள் தங்கள் கைகளை இதய வடிவத்தில் வைத்து காட்சி தருமாறு கூறினார்.

அந்தக் காட்சியைப் படமெடுத்தார் திரு கோ. அதுதான் சிங்கப்பூரின் ‘ஃபார்த் ஹார்ட்ஸ்டிரிங்ஸ் ஆஃப் சிங்கப்பூர் ஃபோட்டோகிராஃபி காம்பெட்டிஷன்’ (fourth Heartstrings of Singapore photography competition) என்ற புகைப்படப் போட்டியில் முதல் பரிசைத் தட்டிச் சென்றது.

திரு கோ, பொழுதுபோக்காக புகைப்படங்கள் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த மூன்றாண்டுகளாகத் தொண்டூழிய அடிப்படையில் மக்கள் கழகத்தில் புகைப்படக்காரராக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் புகைப்படப் போட்டியை சிங்கப்பூர் சீனக் கலாசார நிலையமும் சிங்கப்பூர் சீன குலவழிச் சங்க சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

சிங்கப்பூர் சீனக் கலாசார நிலையத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 26) கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரும் சட்ட இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் விருது வழங்கிய 46 பேரில் திரு கோவும் ஒருவர்.

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் குலவழிச் சங்கங்கள், கலாசாரக் குழுக்கள், அரசு அமைப்புகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 100 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

விருது கிடைத்தது பற்றிக் கூறும் திரு கோ, “சரியான புகைப்படக் காட்சி வரும்வரை நான் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன். சரியான காட்சி கிடைக்கும்வரை அவர்களைத் திரும்பத் திரும்ப படம் எடுப்பதற்கு நிற்கச் சொல்வேன்,” என்றார். 

குறிப்புச் சொற்கள்