‘ஏ’ பிரிவைத் தவிர பெரும்பாலான பிரிவுகளில் சிஓஇ கட்டணங்கள் உயர்வு

‘ஏ’ பிரிவைத் தவிர பெரும்பாலான பிரிவுகளில் சிஓஇ கட்டணங்கள் உயர்வு

2 mins read
463e7cd7-4ae5-4c46-838b-c7e648cbf3df
மே முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் கூடுதலாக வாகன உரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நிலப் போக்துவரத்து ஆணையம், புதன்கிழமையன்று (மே 20) நடத்திய ஆக ண்மைய ஏலக் குத்தகையில், ‘பி’ பிரிவு கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணங்கள் $129,501 ஆக உயர்ந்தன. அதே நேரத்தில், ‘ஏ’ பிரிவு கார்களுக்கான கட்டணங்கள் சற்று குறைந்தன.

சிறிய கார்கள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான ‘ஏ’ பிரிவின் கட்டணம், மே 6ஆம் தேதி நடைபெற்ற முந்தைய ஏலக்குத்தகையில் பதிவான $124,790ஐ விட 0.4 விழுக்காடு குறைந்து, $124,229 ஆகப் பதிவானது.

மற்ற பிரிவுகளில் கட்டணங்கள் உயர்ந்தன. பெரிய, அதிக சக்திவாய்ந்த கார்கள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான ‘பி’ பிரிவு சான்றிதழ் கட்டணம், $126,236லிருந்து 2.6 விழுக்காடு உயர்ந்து $129,501 ஆனது.

பொதுப் பிரிவு வாகனங்களுக்கான கட்டணம் $127,700லிருந்து $130,000 ஆக உயர்ந்தது.

மோட்டார் சைக்கிளுக்கான சிஓஇ கட்டணம் 2.5 விழுக்காடு உயர்ந்து, $9,452லிருந்து $9,689 ஆக அதிகரித்தது.

வர்த்தகப் பிரிவு வாகனங்களுக்கான சிஓஇ கட்டணத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு பதிவானது. இதன் கட்டணம் $92,223 என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. இது முந்தைய கணக்கெடுப்பில் $87,479 ஆக இருந்ததை விட 5.4 விழுக்காடு அதிகமாகும்.

மே முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் கூடுதலாக வாகன உரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தது.

இந்த மூன்று மாதங்களில், பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட 18,824 சான்றிதழ்களை விட 1.2 விழுக்காடு அதிகமாக, மொத்தம் 19,052 சான்றிதழ்கள் வழங்கப்படும்.

குறிப்புச் சொற்கள்
நிலப் போக்குவரத்து ஆணையம்வாகன உரிமைச் சான்றிதழ்கட்டணம்