ஜூலை 9ஆம் தேதி நடந்த ஏலத்தில் எல்லாப் பிரிவுகளிலும் வாகன உரிமை சான்றிதழ்களுக்கான (சிஓஇ) கட்டணம் அதிகரித்துள்ளது.
சிறிய கார்கள், சக்தி குறைந்த, மின்சார வாகனங்களுக்கான பிரிவு ஏ-யில் மூன்று விழுக்காடு கூடி முந்தைய 98,124 வெள்ளியிலிருந்து 101,102 வெள்ளிக்கு கூடியது.
பெரிய கார்கள், அதிக சக்திவாய்ந்த மற்றும் மின்சார வாகனங்களுக்கான பிரிவு பியில் சான்றிதழ்களுக்கான கட்டணம் முந்தைய 116,670 வெள்ளியிலிருந்து 2.5 விழுக்காடு கூடி $119,600ஆனது
பொதுப் பிரிவு ‘சிஓஇ’ 118,500 வெள்ளிக்கு ஏலம் போனது. இது, முந்தைய ஏலத்தின் 116,889 வெள்ளியைவிட 1.4 விழுக்காடு அதிகம்.
மோட்டார் சைக்கிள்களைத் தவிர வேறு எந்த வகையான வாகனத்தையும் பதிவு செய்ய பொதுப் பிரிவைப் பயன்படுத்தலாம். இருந்தாலும் அவை எப்போதும் பெரிய மற்றும் அதிக சக்திவாய்ந்த கார்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
வர்த்தக வாகனங்களுக்கான பிரிவு சியில் சான்றிதழ் கட்டணம், 2.6 விழுக்காடு அதிகரித்து முந்தைய 65,000 கட்டணத்தைவிட 66,689க்கு அதிகரித்துள்ளது.
மோட்டார் சைக்கிள்களுக்கான பிரிவு டி-யில் ‘சிஇஓ’ கட்டணம் 9.2% கூடி 8,600லிருந்து $9,389ஆனது.