சிறிய கார்களுக்கான ‘சிஓஇ’ $109,501க்கு ஏற்றம்

1 mins read
32ba6098-9241-4cd3-88c1-32946af23d4d
பெரிய மற்றும் அதிக சக்தி வாய்ந்த கார்களுடன் மின்சார வாகனங்களுக்கான ‘பி’ பிரிவில் சிஓஇ, முன்னைய ஏலக்குத்தகையில் பதிவான $123,900ஐ விட 7.1 விழுக்காடு சரிந்து, $115,102 ஆனது. - படம்: பெரித்தா ஹரியான்

புதன்கிழமை (டிசம்பர் 17) அன்று முடிவடைந்த ஆண்டின் கடைசி ஏலக்குத்தகை நடவடிக்கையில், சிறிய கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணங்கள் 3.9 விழுக்காடு உயர்ந்து $109,501 என்று பதிவானது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

சிறிய கார்கள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான ‘ஏ’ பிரிவில், சிஓஇ கட்டணம் முன்னைய ஏலக்குத்தகையில் பதிவான $105,413ஐ விட 3.9 விழுக்காடு உயர்ந்தது.

பெரிய மற்றும் அதிக சக்தி வாய்ந்த கார்களுடன் மின்சார வாகனங்களுக்கான ‘பி’ பிரிவில் சிஓஇ, முன்னைய ஏலக்குத்தகையில் பதிவான $123,900ஐ விட 7.1 விழுக்காடு சரிந்து, $115,102 ஆனது. பெரிய கார்களுக்குரிய பொதுப் பிரிவான ‘இ’ பிரிவில், கட்டணம் $123,000லிருந்து 3.3 விழுக்காடு சரிந்து $119,000 என்று பதிவானது. வர்த்தக வாகனங்களுக்கான ‘சி’ பிரிவில் சிஓஇ, இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்த $76,501ஐ காட்டிலும் 0.7 விழுக்காடு அதிகரித்து, $77,003 ஆனது.

மோட்டார்சைக்கிள்களுக்கான சான்றிதழ் கட்டணம் $8,289லிருந்து 2.5 விழுக்காடு குறைந்து, $8,081 என்று பதிவானது. அடுத்த ஏலக் குத்தகை 2026, ஜனவரி 7ஆம் தேதி நடைபெறும்.  

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்