$150 மில்லியன் மதிப்பிலான விளம்பர ஒப்பந்தத்தைப் பெற்ற ‘கம்­ஃபர்ட்­டெல்­குரோ’

1 mins read
92345608-c2ac-4e71-8368-29034e3a90a7
பொதுப் பேருந்துத் துறை விளம்பர நடவடிக்கைகளை ஒரே நிறுவனத்தின்கீழ் நிலப் போக்குவரத்து ஆணையம் ஒருங்கிணைப்பது இதுவே முதல் முறை. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் பொதுப் பேருந்துகளில் இருக்கும் விளம்பர இடங்கள் நவம்பர் 1ஆம் தேதி முதல் படிப்படியாக கம்­ஃபர்ட்­டெல்­குரோ நிறு­வ­னம் வசம் ஒப்படைக்கப்படும்.

$150 மில்லியன் மதிப்புள்ள விளம்பர ஒப்பந்தம், அதன் துணை நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதையடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

போக்குவரத்து நிறுவனமான கம்­ஃபர்ட்­டெல்­குரோவின் விளம்பரப் பிரிவான ‘மூவ் மீடியா’ நிறுவனத்திற்கு அனைத்துப் பொதுப் பேருந்துகளிலும் அனைத்துப் பேருந்துச் சந்திப்புகளிலும் இருக்கும் விளம்பர இடங்களை ஏழு ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த ஒப்பந்தம் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் தொடர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பொதுப் பேருந்துத் துறை விளம்பர நடவடிக்கைகளை ஒரே நிறுவனத்தின்கீழ் நிலப் போக்குவரத்து ஆணையம் ஒருங்கிணைப்பது இதுவே முதல் முறை.

இந்த நடவடிக்கை விளம்பரம் செய்யும் நிறுவனத்தின் நடவடிக்கைகளில் பொருளியல் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்