யுனிவர்சல் ஸ்டூடியோசில் சலசலப்பு; ஆடவர்மீது குற்றச்சாட்டு

யுனிவர்சல் ஸ்டூடியோசில் சலசலப்பு; ஆடவர்மீது குற்றச்சாட்டு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

14 Nov 2025 - 7:22 pm

1 mins read

செந்தோசாவில் உள்ள யுனிவர்சல் ஸ்டூடியோசில் நடந்த நிகழ்ச்சியில் இடையூறு ஏற்படுத்தியதற்காக ரசிகர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஜான்சன் வென் என்னும் 26 வயது ஆஸ்திரேலிய ஆடவர் பிரபல அமெரிக்க நடிகை அரியானா கிராண்டே கலந்துகொண்ட ‘விக்கெட்: ஃபார் குட்’ (Wicked: For Good) என்னும் திரைப்பட விளம்பர நிகழ்ச்சியில் பிரச்சினை செய்தார்.

அரியானா, நடந்து வரும்போது ஜான்சன் பாதுகாப்புத் தடுப்புகளைத் தாண்டிக் குதித்து அவர் அருகே சென்றார். அதன்பின்னர் ஜான்சன் பாதுகாப்பு அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டார். இச்சம்பவம் வியாழக்கிழமை (நவம்பர் 13) நடந்தது.

பொது இடத்தில் தொல்லை கொடுக்கும் விதமாக ஜான்சன் நடந்துகொண்டதாக வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்பட்டது. காணொளி வழி ஜான்சன் நீதிமன்ற விசாரணையில் கலந்துகொண்டார்.

தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஜான்சன் ஒப்புக்கொண்டார்.

ஜான்சன் தடுப்புகளைத் தாண்டி அரியானாவின் அருகில் நிற்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. ரசிகரின் திடீர் நடவடிக்கையால் அரியானா அதிர்ச்சியடைந்தார்.

ஜான்சன் குற்றம் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 2,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.

ஜான்சன் இதுபோன்று பல இடங்களில் இடையூறு ஏற்படுத்தியுள்ளார். 2024ஆம் ஆண்டு பாரிசில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்திலும் அவர் இடையூறு செய்தார்.

குறிப்புச் சொற்கள்