சிங்கப்பூரில் சட்டவிரோதமாகச் செயல்படும் ரகசியக் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகத்தின் பேரில் 13 ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களின் வயது 21க்கும் 39க்கும் இடைப்பட்டது என்று அதிகாரிகள் கூறினர்.
நவம்பர் 28, 29 ஆகிய நாள்களில் சிங்கப்பூர் முழுவதும் அதிகாரிகள் நடத்திய அமலாக்க நடவடிக்கையில் சந்தேக நபர்கள் சிக்கினர்.
ஏறத்தாழ 40 பொழுதுபோக்கு இடங்கள், இரவு நேரக் கேளிக்கை இடங்கள், உணவு, பானக் கடைகள் உள்ளிட்ட பல இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். கிட்டத்தட்ட 100 பேரிடம் அவர்கள் விசாரணை நடத்தினர்.
சந்தேக நபர்களின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, 10,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

