தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தரவு மையத் துறையில் வேலைகளும் சம்பளமும் அதிகம்

1 mins read
8b7e9ee4-d548-4295-9421-d908f495ee11
தரவு மையத் துறையில் 25,000 நேரடி வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. - படம்: ஊடகம்

தரவு மையத் துறை சிங்கப்பூரின் பொருளியலுக்கு மிகப்பெரிய பங்காற்றி உள்ளதாகவும் அந்தத் துறையில் 25,000 நேரடி வேலைகள் உருவாகி உள்ளதாகவும் ஆசிய-பசிபிக் தரவு மையச் சங்கம் (APDCA) தெரிவித்து உள்ளது.

‘அமேஸான் வெப் சர்வீசஸ்’ கடந்த 2023ஆம் ஆண்டு நடத்திய ஆய்வை மேற்கோள் காட்டி அது வெளியிட்டுள்ள அறிக்கையில், சிங்கப்பூரின் பொருளியலுக்கு ஆண்டுதோறும் $2 பில்லியனுக்கும் மேற்பட்ட பங்களிப்பை அந்தத் துறை அளிப்பதாகக் குறிப்பிட்டு உள்ளது.

தரவு மையத்தின் இதர பணிகளுக்கு 7,000 பேர் நியமிக்கப்பட்டுள்ள வேளையில், தரவு மைய விநியோகத் தொடர் வாயிலாக மேலும் 17,000 பேர் இணைந்திருப்பதாக அறிக்கை தெரிவித்தது.

அந்தத் துறையின் சம்பள விகிதமும் தேசிய சராசரியைக் காட்டிலும் 35 விழுக்காடு அதிகம். அதேபோல, உற்பத்தித் திறனும் தேசிய தொழிலாளர் உற்பத்தித் திறனைக் காட்டிலும் 2.6 விழுக்காடு அதிகம் என அது குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்