$2.6 பில்லியன் முதலீட்டை ஈர்க்கத் திட்டமிடும் ‘டேஒன்’

1 mins read
6f4d98c9-805f-4899-9328-25440490da03
சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து, ஹாங் காங், ஜப்பான், பின்லாந்து உள்ளிட்ட நாடுகளில் டேஒன் நிறுவனத்தின் தரவு நிலையங்கள் செயல்படுகின்றன. - படம்: ராய்ட்டர்ஸ்

சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு செயல்படும் டேஒன் (DayOne) தரவு நிலைய நிறுவனம் $2.6 பில்லியன் முதலீட்டை ஈர்க்கத் திட்டமிட்டுள்ளது.

தற்போது அதற்கான நடவடிக்கையில் நிறுவனம் முழுவீச்சில் களமிறங்கியுள்ளது. கிடைக்கும் முதலீடுமூலம் அனைத்துலக அளவில் சேவையை விரிவுபடுத்த இருப்பதாக விவரம் தெரிந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

திட்டமிட்டபடி டேஒன் நிறுவனத்திற்கு $2.6 பில்லியன் முதலீடு கிடைத்துவிட்டால் நிறுவனத்தின் மதிப்பு $12 பில்லியனுக்கு உயரும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

இவ்வாண்டு இறுதிக்குள் நிறுவனத்திற்கு முதலீடு கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் முழுமையான விவரங்கள் ஏதும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.

சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து, ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் டேஒன் நிறுவனத்தின் தரவு நிலையங்கள் உள்ளதாக அதன் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்