போலி ஆவணங்கள் தயாரித்த மருத்துவருக்குச் சிறை

1 mins read
dd1fef75-9d66-49e0-bed0-03160ccecfe2
மருத்துவ சிகிச்சை உரிமத்தைப் பெறுவதற்காக பெர்னட் டான் வென் ஷெங் போலி ஆவணங்களைத் தயாரித்துச் சமர்ப்பித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

போலி திறன் சான்றிதழ்களைத் தயாரித்து அவற்றை சுகாதார அமைச்சிடம் சமர்ப்பித்த அழகியல் மருத்துவ நிபுணருக்குத் திங்கட்கிழமை (ஜூலை 29) நான்கு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மருத்துவ சிகிச்சை உரிமத்தைப் பெறுவதற்காக பெர்னட் டான் வென் ஷெங் இக்குற்றத்தைப் புரிந்தார்.

போலி ஆவணங்கள் தயாரித்ததாகவும் அரசாங்க ஊழியரிடம் பொய் கூறியதாகவும் குற்றத்தை ஜூன் 30ல் 35 வயது டான் ஒப்புக்கொண்டார்.

பொது சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றை பாதுகாக்கவே சுகாதார அமைச்சின் ஒழுங்குமுறை கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நீதிபதி ஜேம்ஸ் எலிஷா லீ வலியுறுத்தினார்.

சுகாதார அமைச்சுக்கு எதிரான குற்றத்தை டான் தெரிந்தே புரிந்ததாக அவர் கூறினார். அமைச்சின் ஒழுங்குமுறை செயல்முறைக்கு அவர் மதிப்பளிக்கவில்லை என்பதை இது காட்டுவதாக நீதிபதி தெரிவித்தார்.

டானின் குற்றங்கள் எவ்வாறு வெளிச்சத்துக்கு வந்தன என்பது குறித்து நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கவில்லை. ஆனால், அவர் மீது 2024ஆம் ஆண்டில் குற்றம் சுமத்தப்பட்டது.

டானுக்கு திங்கட்கிழமை (ஜூலை 29) $20,000க்குப் பிணை வழங்கப்பட்டது.

ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று அவர் சிறைத் தண்டனையைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்