லாரியின் உயர எச்சரிக்கைக் கருவியை முடக்கிய ஓட்டுநருக்கு அபராதம்

1 mins read
3eddb6af-3acf-4653-a0f3-0a32b1726be8
லாரியின் உயர எச்சரிக்கைக் கருவியை முடக்கியதற்காகவும் மேம்பாலச் சாலையின் அடிப்பகுதி மீது மோதியதற்காகவும் செவ்வாய்க்கிழமையன்று (டிசம்பர் 2) குருசாமி நாகராஜனுக்கு $8,000 அபராதம் விதிக்கப்பட்டது. - படம்: பிக்சாபே

லாரியில் பாரந்தூக்கியை ஒழுங்காகப் பொருத்தாமல் தோ பாயோ நார்த் மேம்பாலச் சாலையின் அடிப்பகுதியில் மோதிய ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இந்திய நாட்டவரான 42 வயது குருசாமி நாகராஜன், லாரியின் உயர எச்சரிக்கைக் கருவியை முடக்கியிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.

லாரியின் உயர எச்சரிக்கைக் கருவியை முடக்கியதற்காகவும் மேம்பாலச் சாலையின் அடிப்பகுதி மீது மோதியதற்காகவும் செவ்வாய்க்கிழமையன்று (டிசம்பர் 2) குருசாமி நாகராஜனுக்கு $8,000 அபராதம் விதிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் வாகனங்கள் ஓட்ட அவருக்கு ஆறு மாதத் தடை விதிக்கப்பட்டது.

இந்த வழக்குடன் தொடர்புடைய விபத்து ஜூன் 27ஆம் தேதியன்று நிகழ்ந்தது.

குருசாமி நாகராஜன் ஓட்டிய லாரி டிடிகே சர்வீசஸ் நிறுவனத்துக்குச் சொந்தமானது.

தோ பாயோ லோரோங் 8ல் லாரியை ஓட்டி வெட்டப்பட்ட மரக்கிளைகளை லாரியில் ஏற்றிச் செல்லும் பணி குருசாமி நாகராஜனுக்குக் கொடுக்கப்பட்டது.

லாரியில் அதிகளவிலான மரக்கிளைகள் ஏற்றப்பட்டதால் பாரந்தூக்கியை ஒழுங்காகப் பொருத்தமுடியாமல் போனது என்று அரசாங்க வழக்கறிஞர் கூறினார்.

இதனால் லாரியின் உயர எச்சரிக்கைக் கருவி இடைவிடாது ஒலி எழுப்பிக்கொண்டிருந்தது.

ஆனால், நிலைமையைச் சரிசெய்வதற்குப் பதிலாக உயர எச்சரிக்கைக் கருவியைக் குருசாமி நாகராஜன் முடக்கினார்.

குறிப்புச் சொற்கள்