பொங்கோல் வட்டாரத்தில் கார்மீது மின்சைக்கிள் மோதியதில் 40 வயது ஆடவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் மே 11 அன்று நேர்ந்தது.
பொங்கோல் டிரைவ், பொங்கோல் ஈஸ்ட் ஆகியவற்றுக்கு இடையிலான சந்திப்பில் இரவு 11 மணியளவில் காரும் மின்சைக்கிளும் மோதிக்கொண்டது குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஆடவர் சுயநினைவுடன் இருந்தார்.
எஸ்ஜி ரோட் விஜிலாண்டே ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில் கார் ஒன்று சாலையில் ஆக இடத்தடத்திலிருந்து வலது புறம் திரும்புவதைக் காண முடிந்தது. அதே நேரத்தில் ஆக வலது புறத்தில் இருக்கும் தடத்தில் நேராக வேகத்தில் வந்த மின்சைக்கிள் கார்மீது மோதியது.
மின்சைக்கிள் அவ்வளவு வேகத்தில் மோதியதில் அதை ஓட்டிய ஆடவர் தூக்கியெறியப்பட்டு காருக்கு முன் விழுந்தார்.
காவல்துறை அதிகாரிகளின் விசாரணை தொடர்கிறது.