விரைவுச்சாலை விபத்து: சுயநினைவை இழந்த மோட்டார்சைக்கிளோட்டி

1 mins read
fa7578fc-296d-493c-987b-ed1c77cb3354
சாங்கி விமான நிலையத்தை நோக்கிய தீவு விரைவுச்சாலையில் விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: சமூக ஊடகம்

தீவு விரைவுச்சாலையில் புதன்கிழமை (டிசம்பர் 3) காலை நிகழ்ந்த விபத்தின் தொடர்பில் 28 வயது மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் சாலையில் விபத்து நிகழ்ந்திருப்பதாகக் காலை 6.40 மணியளவில் தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின.

அந்த விபத்து தொடர்பாக வியாழக்கிழமை (டிசம்பர் 4) மேல்விவரங்களை வெளியிட்ட காவல்துறை, தோ பாயோ லோரோங் 2 வழியாக சாங்கி துணைச் சாலைக்கு இட்டுச் செல்லும் விரைவுச்சாலையின் ஒரு பகுதியில் மோட்டார்சைக்கிளோட்டி வழுக்கி விழுந்ததாகக் கூறியது.

சுயநினைவை இழந்த நிலையில் அவர் டான் டோக் செங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்து தொடர்பாகக் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்