சிங்கப்பூரர்கள், 2027ஆம் ஆண்டில் ஐந்து நீண்ட வார இறுதிகளை எதிர்பார்க்கலாம்.
மனிதவள அமைச்சு வியாழக்கிழமை (ஜூன் 18) வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
2027ன் ஜனவரி முதல்தேதி, வெள்ளிக்கிழமை வருகிறது.
சீனப் புத்தாண்டின் முதல் இரண்டு நாள்கள், பிப்ரவரி 6, 7ஆம் தேதிகளில் வருகின்றன. அவை, வார இறுதி நாள்கள் என்பதால் பிப்ரவரி 8ஆம் தேதி (திங்கட்கிழமை) பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
மார்ச் 10ஆம் தேதி, புதன்கிழமை நோன்புப் பெருநாள். அதையடுத்து, மார்ச் 26ஆம் தேதி, புனித வெள்ளி.
அடுத்த ஆண்டின் தொழிலாளர் தினமும் (மே 1) கிறிஸ்துமசும் (டிசம்பர் 25) சனிக்கிழமைகளில் வருகின்றன.
மே 17ஆம் தேதி வரும் ஹஜ்ஜுப் பெருநாளும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரும் தேசிய தினமும் திங்கட்கிழமைகளில் வருகின்றன. விசாக தினம், மே 20ஆம் தேதியும் தீபாவளி, அக்டோபர் 28ஆம் தேதியும் வருகின்றன. அவை, வியாழக்கிழமைகள்.

