தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போதை பழக்கத்திலிருந்து திருந்தி போதைப்பொருள் எதிர்ப்புக் குழுவுக்குப் பணியாற்றும் முன்னாள் வானொலி அறிவிப்பாளர்

2 mins read
4d6ab51c-47f0-4ade-bf01-3d013a9f3c51
கைருல் அஷ்ரி ஹான்ஸ் தாவூத் சிங்கப்பூர் போதைப்பொருள் தடுப்புச் சங்கத்தில் வேலை செய்துகொண்டே மறுவாழ்வுத் தங்குவிடுதியான சிலாராங் பார்க் வளாகத்தில் தங்கி வருகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மலாய்மொழி வானொலி நிலையமான ரியா 89.7எஃப்எம்மின் வளர்ந்துவரும் நட்சத்திரமாக இருந்தார் முன்னாள் வானொலி அறிவிப்பாளர் கைருல் அஷ்ரி ஹான்ஸ் தாவூத்.

ஆனால், போதை பழக்கத்துக்கு அடிமையான கைருல் 2023ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் அவரது வானொலி அறிவிப்புப் படலமும் முடிவுக்கு வந்தது.

அப்போது அவருக்கு 31 வயது.

கைது செய்யப்படுவதற்கு முன்பு ஏழாண்டுகளாக தாம் போதை பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததாக ஹான்ஸ் கூறினார்.

ஒருகட்டத்தில் ஒவ்வொரு நாளும் ‘ஐஸ்’ வகை போதைப்பொருளை உட்கொண்டதாக அவர் பகிர்ந்துகொண்டார்.

தற்போது அவர் சிங்கப்பூர் போதைப்பொருள் தடுப்புச் சங்கத்தில் பணிபுரிகிறார்.

போதை பழக்கத்தால் யார் வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அவர் கைது செய்யப்பட்டார். விடுதலை செய்யப்பட்ட பிறகு அவர் மீண்டும் போதை பழக்கத்துக்கு அடிமையானார். அவரது திருமண பந்தமும் முறிந்தது.

2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அவர் போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்துக்குத் திரும்பினார்.

தற்போது அவர் சிங்கப்பூர் போதைப்பொருள் தடுப்புச் சங்கத்தில் வேலை செய்துகொண்டே மறுவாழ்வுத் தங்குவிடுதியான சிலாராங் பார்க் வளாகத்தில் தங்கி வருகிறார்.

போதை பழக்கத்துக்கு எதிராக அவர் தற்போது குரல் கொடுத்து வருகிறார்.

மறுவாழ்வுத் தங்குவிடுதியில் தங்குபவர்கள் வேலைக்கு அல்லது கல்வி பயில அல்லது திறன் பயிற்சிக்குச் செல்லலாம். ஆனால், மாலை நேரத்தில் மறுவாழ்வுத் தங்குவிடுதிக்குத் திரும்பிவிட வேண்டும்.

ஹான்சும் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாலை நேரத்தில் அவர் மறுவாழ்வுத் தங்குவிடுதிக்குத் திரும்புவார். 15 பேர் கொண்ட அறையில் அவர் தங்குகிறார்.

குறிப்புச் சொற்கள்