ஆசியாவில் ஆகச் செல்வாக்குமிக்க நிறுவனமாக ‘கெய்ன் சிட்டி’

2 mins read
426957cd-298f-4e9c-aa2d-c0a5bfdc19f9
விருது விழாவில் (இடமிருந்து) விருதளிப்பு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ஷங்கரி பாலகிருஷ்ணன், கெய்ன் சிட்டி பெஸ்ட் எலக்டிரானிக் பிரதிநிதி காமோன்சின் சட்டுரட்டபோல், ஆலோசகர் லூயிஸ் புவேனோ நீட்டோ. - படம்: கெய்ன் சிட்டி

சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட ‘கெய்ன் சிட்டி பெஸ்ட் எலெக்டிரானிக்’, குளிரூட்டிப் பெட்டிகளை மறுபயனீடு செய்யும் இரண்டு பங்காளிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. உலோகம், வாயு ஆகியவற்றைச் சுற்றுச்சூழலுக்கு உகந்த செயல்முறையில் மீட்பதுடன் மறுபயனீட்டு முயற்சிகளையும் விரிவுபடுத்த அந்நிறுவனம் வெவ்வேறு அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இதுபோன்ற முயற்சிகளுக்காக இவ்வாண்டின் ‘ஆசிய பெருநிறுவன உன்னதநிலை, நீடித்த நிலைத்தன்மை விருதுகள் (Asia Corporate Excellence and Sustainability Awards 2024) நிகழ்ச்சியில் ஆசியாவின் ஆகச் செல்வாக்குமிக்க நிறுவனமாக அது சிறப்பிக்கப்பட்டது.

இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் ‘கெய்ன் சிட்டி’, ஒருசில பொருள்களுக்கான 9% பொருள், சேவை வரியை வாடிக்கையாளர்கள் டிசம்பர் 29ஆம் தேதி வரை கட்டத் தேவையில்லை என்று அறிவித்துள்ளது. நிறுவனத்தின் இணையத்தளத்தில் பொருள்களின் பட்டியலை வாடிக்கையாளர்கள் பார்வையிடலாம்.

வாடிக்கையாளரை மையப்படுத்துதல், புத்தாக்கம், நீடித்த நிலைத்தன்மை, செயல்பாட்டு உன்னதநிலை போன்ற அம்சங்களில் ‘கெய்ன் சிட்டி’ நிகழ்த்தியுள்ள சாதனைகளை இந்த விருது அடையாளம் கண்டுள்ளது.

வருடாந்தர நிகழ்வான இவ்விருது விழா, ‘மோர்ஸ் குரூப்’ ஏற்பாட்டில் நடைபெற்று வருகிறது. ஆசிய வட்டாரத்தில் தலைசிறந்த தலைமைத்துவம், நீடித்த நிலைத்தன்மை, செல்வாக்கு கொண்ட நிறுவனங்களை இவ்விருது சிறப்பித்து வருகிறது. தாய்லாந்தின் பேங்காக் தலைநகரில் நவம்பர் 15ஆம் தேதி விருதளிப்பு நடைபெற்றது.

தொழில்நுட்பத்தையும் செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகளையும் நிறுவனம் பயன்படுத்தி அதன் செயல்பாடுகளை மெருகேற்றி வருவதுடன் இணைய வர்த்தகத் தளங்களை மேம்படுத்தவும் மாறிவரும் வாடிக்கையாளர் தேவைகளை நிறைவுசெய்யவும் முனைவதாக விருது நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்