துணைப் பிரதமர் கான் கிம் யோங் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் இயக்குநர்களின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான், 2024ஆம் ஆண்டு சிங்கப்பூர் நாணய ஆணைய இயக்குநர் குழு தலைவராகப் பொறுப்பேற்றார். அதற்கு முன் அந்தப் பொறுப்பில் திரு லாரன்ஸ் வோங் இருந்தார். அப்போது அவர் துணைப் பிரதமராக இருந்தார்.
இரண்டாவது முறையாகத் தலைவராக உள்ள திரு கானின் பதவிக் காலம் 2026 ஜூன் 1 முதல் 2029 மே 31 வரை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கும்.
இந்நிலையில் திரு ஓங் பாங் தை சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் இயக்குநர் குழுவில் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது பதவிக்காலம் இவ்வாண்டு ஜூன் மாதம் தொடங்கி 2029ஆம் ஆண்டு மே 31 வரை நீடிக்கும்.
தற்போது திரு ஓங், சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தின் துணைத் தலைவராக உள்ளார். தெமாசெக், சிங்கப்பூர் மின்சார வாரியம் உள்ளிட்டவற்றின் இயக்குநர் குழுவிலும் உறுப்பினராக உள்ளார்.
இதற்கு முன்னர் திரு ஓங் கேபிஎம்ஜி (KPMG) சிங்கப்பூரின் தலைமைப் பொறுப்பிலும் இருந்தார்.

