தென்கிழக்காசியாவில் நிலவும் வலுவான சேவைத் தேவை காரணமாக, ‘கிராப்’ நிறுவனம் தனது 2026ஆம் ஆண்டுக்கான வருவாய் மற்றும் லாபக் கணிப்பை உயர்த்தியுள்ளது.
ஜூன் மாதத்துடன் முடிந்த இரண்டாம் காலாண்டில், கிராப் நிறுவனத்தின் நிகர லாபம் 620 விழுக்காடு அதிகரித்து 252 மில்லியன் அமெரிக்க டாலரை (S$323 மில்லியன்) எட்டியுள்ளது. இந்தோனீசியாவின் ‘சூப்பர்பேங்க்’ மின்னிலக்க வங்கியின் ஒருங்கிணைப்பு மூலம் கிடைத்த 307 மில்லியன் அமெரிக்க டாலர் ஒருமுறை வருவாயே இந்த லாப உயர்வுக்கு முதன்மைக் காரணமாகும்.
இக்காலகட்டத்தில் நிறுவனத்தின் நிகர வருவாய் 22 விழுக்காடு அதிகரித்து 997 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது. தென்கிழக்காசியாவின் 900க்கும் மேற்பட்ட நகரங்களில் 54 மில்லியன் பயனர்களுக்குச் சேவையாற்றும் கிராப், 2026ஆம் நிதியாண்டில் தனது மொத்த விற்பனை 4.15 பில்லியன் அமெரிக்க டாலர் வரை உயரும் என்று கணித்துள்ளது.
மேலும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில், கூடுதல் 750 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொந்தப் பங்குகளைத் திரும்பப் பெறவும் கிராப் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது


