அதிகம் சம்பாதிக்கும் பெண் குடும்பச் சொத்து மேல்முறையீட்டு வழக்கில் வெற்றி

1 mins read
b37a776d-61da-4771-9607-e73e20e23ce1
$7.8 மில்லியன் சொத்தில் 67 விழுக்காட்டை பெண்ணுக்கு வழங்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. - கோப்புப் படம்: இணையம்

மாதம் $30,000 சம்பளம் பெறும் பெண் ஒருவர் தமது திருமணச் சொத்தின் பங்கை அதிகரிக்கக் கோரிய மேல்முறையீட்டு வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்.

கணவரிடமிருந்து மணவிலக்கு பெற்ற பின்னர், கணவன்-மனைவி சம்பந்தப்பட்ட குடும்பச் சொத்தில் 60 விழுக்காட்டை அந்தப் பெண்ணுக்கு வழங்க சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருந்தது.

ஆயினும், திருமணம் என்பது இருவர் சம்பாதிக்கக்கூடிய இரட்டை வருமானம் என்பதை வலியுறுத்தி தமது பங்கை அதிகரிக்குமாறு மேல்முறையீடு செய்தார் அந்தப் பெண்.

அந்த மேல்முறையீட்டு மனுவை மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் வூ பி லி, டெபில் ஓங், மேவிஸ் சியோன் ஆகியோர் அந்த நீதிபதிகள்.

விசாரணைக்குப் பின்னர் பிப்ரவரி 5ஆம் தேதி அந்த அமர்வு தீர்ப்பளித்தது.

கணவன்-மனைவி குடும்பச் சொத்து மதிப்பான $7.8 மில்லியனில் 67 விழுக்காட்டை அந்தப் பெண்ணுக்கு வழங்க அமர்வு உத்தரவிட்டுள்ளது.

“திருமணம் என்பது இரட்டை வருமானம் என கருதப்பட வேண்டும். ஒருவர் மட்டுமே சம்பாதிக்கிறார் என்பதற்காக அதனை ஒற்றை வருமானமாகக் கருதக்கூடாது.

“மேலும், ஒற்றை வருமானமா அல்லது இரட்டை வருமானமா என்பதைத் தீர்மானிக்கும்போது, திருமண வாழ்க்கையில் அவரவருக்கு இருக்கும் பொறுப்புகள் பற்றிய தரமான மதிப்பீட்டில் கவனம் செலுத்தப்பட வேண்டும்,” என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வழக்கில் சம்பந்தப்பட்ட கணவன், மனைவியின் பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்