எம்ஆர்டியில் மின்சிகரெட் பிடித்த ஆடவரின் வீட்டில் சோதனை

எம்ஆர்டியில் மின்சிகரெட் பிடித்த ஆடவரின் வீட்டில் சோதனை

படம்: சமூக ஊடகம்

13 May 2025 - 6:43 pm

1 mins read

எம்ஆர்டி ரயிலில் மின்சிகரெட் பிடித்த 36 வயது ஆடவர் அடையாளம் காணப்பட்டுவிட்டதாக சுகாதார அறிவியல் ஆணையம் திங்கட்கிழமை (மே 13) தெரிவித்தது.

அந்த ஆடவரின் வீட்டை ஆணையத்தின் அதிகாரிகள் சோதனையிட்டனர். ஆனால், வீட்டில் மின்சிகரெட் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

தாம் பயன்படுத்திய மின்சிகரெட்டை வீசிவிட்டதாக அந்த ஆடவர் தெரிவித்தார்.

இதுகுறித்து ஆணையம் விசாரணை நடத்துகிறது.

மின்சிகரெட்டை வாங்குவது, வைத்திருப்பது, பயன்படுத்துவது சிங்கப்பூரில் சட்டப்படி குற்றம். இணையம் மூலம் அல்லது வெளிநாடுகளிலிருந்து மின்சிகரெட்டுகளை வாங்குவதும் குற்றமாகும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் $2,000 அபராதம் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
மின்சிகரெட்எம்ஆர்டிசோதனை