பெண் ஒருவர் ஆடையில்லாமல் எடுத்துக்கொண்ட படங்களைத் தமது சக ஊழியர்களிடம் காட்டிய முன்னாள் மாணவர் பராமரிப்பு ஆசிரியருக்கு அக்டோபர் 18ஆம் தேதியன்று நன்னடத்தைக் கண்காணிப்புத் தண்டனை விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட அப்பெண்ணின் மானத்துக்குக் களங்கம் ஏற்படுத்த விரும்பிய ஆடவருடன் அப்படங்களை அவர் பகிர்ந்துகொண்டார்.
சம்பவம் நிகழ்ந்தபோது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 21 வயது.
நன்னடத்தைக் கண்காணிப்புத் தண்டனையின்கீழ் அந்த 22 வயது பெண் நாள்தோறும் இரவு 11 மணியிலிருந்து காலை 6 மணி வரை வெளியே செல்லக்கூடாது.
அதுமட்டுமல்லாது, 80 மணி நேரத்துக்கு சமூக சேவையில் ஈடுபட வேண்டும்.
அப்பெண்ணின் நன்னடத்தையை உறுதி செய்யும் பொறுப்பு அவரது பெற்றோருக்குத் தரப்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணுக்காக அவரது பெற்றோர் $5,000 பிணைப் பத்திரத்தில் கையெழுத்திட்டனர்.
தமது முறையற்ற செயல் குறித்து அப்பெண் அக்டோபர் 18ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்தார்.


