தம் காதலியின் ஏழு வயது மகன் முன்னிலையில், 2022 ஆகஸ்டில் ஹோட்டல் அறை ஒன்றில் ஆடவர் ஒருவர் தம் காதலியுடன் பாலியல் செயலில் ஈடுபட்டார்.
தங்களது பாலியல் செயலைக் காணொளி எடுக்குமாறு அச்சிறுவனிடம் அவ்விருவரும் கேட்டுக்கொண்டனர். அதற்கு அச்சிறுவனும் இணக்கம் தெரிவித்தான்.
மற்றொரு காணொளியில், கழிவறையில் அந்தப் பெண் மேலாடை அணியாமல் இருந்தது தெரியவந்தது. அப்போது அவரின் காதலரும் மகனும் உடனிருந்தனர்.
இந்நிலையில், அந்த 34 வயது ஆடவருக்குச் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 15) 12 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பதினாறு வயதுக்குக் குறைந்த சிறுவன் முன்னிலையில் பாலியல் செயலில் ஈடுபட்ட குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.
அந்த ஆடவருக்கும் அந்தச் சிறுவனுக்கும் இடையிலான உறவு குறித்து தெரியவில்லை.
அச்சிறுவனின் அடையாளத்தைப் பாதுகாக்க, அவ்விருவர் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. அச்சிறுவனின் 33 வயது தாயார் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதா என்பது பற்றி நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.

