வேறொருவருக்குச் சொந்தமான பற்று அட்டையைப் பயன்படுத்தி $300,000க்கும் அதிகமான பொருள்களை வாங்கிய சுற்றுப்பயணிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஹாங்காங்கைச் சேர்ந்த லியாவ் நுவோசியான் சொந்த நாட்டில் இருந்தபோது அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவர் வேறொருவருக்குச் சொந்தமான பற்று அட்டையைத் தந்தார்.
சிங்கப்பூர் அடைந்ததும் அந்த அட்டையைப் பயன்படுத்தி 25 வயது லியாவ், $300,000க்கும் அதிகமான பொருள்களை வாங்கினார்.
அவற்றில் பல தங்கக் கட்டிகள், மூன்று ரோலெக்ஸ் கைக்கடிகாரங்கள், ஒரு பாட்டேக் ஃபிலிப் கைக்கடிகாரம் ஆகியவை அடங்கும்.
தீர்ப்பு அளிக்கப்பட்டபோது மேலும் 18 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.
லியாவ் புரிந்த குற்றங்களுடன் மூன்று சீன நாட்டவர்களுக்குத் தொடர்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர்களில் இருவர் ஆடவர்கள், ஒருவர் பெண்.

