கவிமாலை அமைப்பின் கவிதைப் போட்டிகள்

1 mins read
வெற்றியாளருக்கு 250 வெள்ளி பரிசு
0c230e7d-5dfc-4b29-bec4-7a7648c20466
தமிழ்மொழி விழாவை முன்னிட்டுக் கவிமாலை அமைப்பு கவிதைப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. - படம்: கவிமாலை

கவிமாலை அமைப்பு, ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தமிழ்மொழி விழாவை முன்னிட்டு மரபுக் கவிதைகளுக்கும் பிற கவிதைகளுக்குமான போட்டிகளை அறிவித்துள்ளது.

இந்த வருடாந்தரப் போட்டிகள், ஆறாவது ஆண்டாக நடைபெறுகின்றன.

சிங்கப்பூரில் வசிக்கும் யாரும் இவற்றில் பங்கேற்கலாம். மரபுக்கவிதை, புதுக்கவிதை என இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும்.

பங்கேற்பாளர்கள் விருப்பப்பட்டால் இரண்டு பிரிவுகளிலுமே தங்கள் கவிதைகளைச் சமர்ப்பிக்கலாம். ஆயினும், ஒரு பிரிவில் அதிகபட்சமாக ஒரு கவிதையைத்தான் அனுப்ப முடியும்.

இளமை அல்லது சிங்கப்பூரைச் சார்ந்த கருப்பொருளில் கவிதை அமைந்திருக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கவிதைக்கு $250 ரொக்கத் தொகை பரிசாக வழங்கப்படும்.

இந்தப் போட்டிக்காக அனுப்பப்படும் கவிதை, வேறெந்த அச்சு ஊடகங்களிலோ மின்னிலக்க ஊடகங்களிலோ வெளிவந்திருக்கக்கூடாது.

கவிதை எந்தப் பிரிவில் அனுப்பப்படுகிறது என்பதையும் கருப்பொருளையும் தெளிவாகக் குறிப்பிட்டு ‘பிடிஎஃப்’ வடிவில் அனுப்பலாம். தொலைபேசி எண், மின்னஞ்சல் ஆகிய விவரங்களையும் குறிப்பிட வேண்டும்.

படைப்புகளை அனுப்புவதற்கான இறுதி நாள் ஏப்ரல் 13.

poems@kavimaalai.com அல்லது https://tinyurl.com/poem-submission-url மின்படிவம் மூலமாக கவிதைகளைச் சமர்ப்பிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்