துணைச் சாலை வடிகாலில் சாய்ந்த லாரி

1 mins read
dcea2632-db5f-461b-9e60-75955735b05e
விபத்துக்குப் பிறகு எடுக்கப்பட்ட காணொளியில், ஒரு கனரக லாரி, துணைச் சாலைக்கு அருகில் உள்ள வடிகாலில் சாய்ந்து கிடப்பதைக் காணலாம். - படம்: SOORAJSOO5/டிக்டாக்

வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) அன்று, 41 வயதுடைய ஆடவர், ஓட்டிச் சென்ற கனரக லாரி, ஈஸ்ட் கோஸ்ட் விரைவுச்சாலையில் உள்ள ஒரு துணைச் சாலைக்கு அருகில் உள்ள வடிகாலில் சறுக்கி விழுந்ததில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

டிசம்பர் 12 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில், சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் ஈஸ்ட் கோஸ்ட் விரைவுச்சாலையின் வெளிச்சாலை 2A-வில் அமைந்துள்ள தானா மேரா கோஸ்ட் ரோட்டில் நடந்த விபத்து குறித்து காவல்துறையினருக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கனரக லாரி சறுக்கியதாக நம்பப்படுகிறது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் ஓட்டுநர் சுயநினைவுடன் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு டிக்டாக் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில், ஒரு கனரக லாரி, துணைச் சாலைக்கு அருகில் உள்ள வடிகாலில் சாய்ந்து கிடப்பதைக் காண முடிந்தது.

விபத்து நடந்த இடத்தில் பாரந்தூக்கிகள் இணைக்கப்பட்ட இரண்டு கனரக வாகனங்களையும் காணலாம்.

காலை 6.37 மணிக்கு எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலப் போக்குவரத்து ஆணையத்தின் பதிவில், விபத்து காரணமாக வெளியேறும் பாதை மூடப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது.

காவல்துறை விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்