பயணிகள் வாக்களிக்க வகை செய்த சொகுசுக் கப்பல்

1 mins read
ab060ce2-0a9b-4965-94c0-21fae8748c07
சிங்கப்பூரர்கள் வாக்களிக்க பாதிப் பயணத்தில் கரை திரும்பியது கெந்திங் ட்ரீம்ஸ் சொகுசுக் கப்பல். - படம்: ரிஸோர்ட்ஸ் வர்ல்ட் குரூஸஸ்

பொதுத் தேர்தல் 2025ல் வாக்களிக்க பாதிப் பயணத்திலிருந்து மீண்டும் சிங்கப்பூர் வந்தது சொகுசுக் கப்பல் ஒன்று. 

3,000 பயணிகளுடன் கிளம்பிய ‘ஜென்டிங் டிரீம்’ சொகுசுக் கப்பல் சிங்கப்பூரர்கள் வாக்களிப்பதற்காக கரைக்குத் திரும்பியது. 

மே 3ஆம் தேதி காலை 7 மணியிலிருந்து மாலை 6 மணிவரை சிங்கப்பூரர்கள் வாக்களிக்க கரைக்குத் திரும்பும் என்று ஏப்ரல் 17ஆம் தேதி பயணிகளிடம் தெரிவித்துவிட்டதாக டிரீம் குரூஸஸ் நிறுவனம் குறிப்பிட்டது.

சிங்கப்பூர் மரினா பே சொகுசுக் கப்பல் நிலையத்திலிருந்து மே 2, வெள்ளிக்கிழமை புறப்பட்டு மே 4, ஞாயிற்றுக்கிழமை திரும்ப முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், வாக்களிப்பு நாளான மே 3ஆம் தேதி சொகுசுக் கப்பல் கரைக்குத் திரும்பியது.

கப்பலில் உள்ள 3,000 பயணிகளில் 2,800 பேர் சிங்கப்பூரர்கள்.

மரினா பே சொகுசுக் கப்பல் நிலையத்தை வந்தடைந்தவுடன் சிங்கப்பூர்ப் பயணிகள் கப்பலிலிருந்து இறங்கி வாக்களித்தனர். அவர்கள் மாலை 5 மணிக்குள் வாயில் மூடும் முன் கப்பலுக்குத் திரும்பவேண்டும்.

சொகுசுக் கப்பல் பயணத்துக்கு முன்கூட்டியே பதிவுசெய்தோர் தொடக்கத்தில் அதை ரத்துசெய்ய நினைத்ததாகத் தெரிவித்தனர்.

பிறகு கப்பல் செய்த சிறப்பு ஏற்பாடுகளை அறிய வந்தபோது அவர்கள் மனத்தை மாற்றிக்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்