மகளிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஆடவருக்கு 24 ஆண்டுச் சிறை

மகளிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஆடவருக்கு 24 ஆண்டுச் சிறை

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

28 Oct 2025 - 5:00 am

1 mins read

சிங்கப்பூரில் 11 வயது மகளை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய அமெரிக்க ஆடவருக்கு 24 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் ஆடவரின் பெயர் வெளியிடப்படவில்லை. காதலியின் தூண்டுதலால் மகளிடம் தகாத முறையில் அவர் நடந்துகொண்டார்.

இணையத்தின் மூலம் சந்தித்த அவரின் காதலி, வெளிநாட்டைச் சேர்ந்த பணிப்பெண். 2023 மார்ச் 17ஆம் தேதி இரவு முழுதும் மகளை வன்கொடுமைக்கு ஆளாக்கினார் அந்த ஆடவர்.

மூன்று வன்கொடுமைக் குற்றச்சாட்டுகளையும் நீதியைத் திசைதிருப்பிய குற்றச்சாட்டையும் அவர் ஒப்புக்கொண்டார். தீர்ப்பு விதிக்கப்படுமுன் மேலும் 12 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.

ஆடவரைத் தூண்டிவிட்ட குற்றத்திற்காக, பிலிப்பீன்சைச் சேர்ந்த 33 வயதுப் பணிப்பெண் ‌‌‌ஷீலா மேரி இபேல்ஸ் அல்பாவுக்கு 22 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஆடவரை வன்கொடுமை செய்யச் சொன்னதாகக் கூறப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். தீர்ப்பின்போது மேலும் 11 குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.

ஆடவர் 50 வயதுக்கும் மேற்பட்டவர் என்பதாலும் அல்பாவ், பெண் என்பதாலும் பிரம்படி விதிக்க சட்டத்தில் இடமில்லை.

அதனால், அவர்களுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைகளில் ஓராண்டு கூடுதலாகச் சேர்க்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
வன்கொடுமைஅப்பாஅமெரிக்காபணிப்பெண்சிறைத்தண்டனை