சொகுசுக் கப்பலில் உள்ள சூதாட்டக்கூடத்தில் ஏறத்தாழ $2,000 இழந்ததாகக் கூறப்படும் ஆடவர் ஒருவர் இழந்த பணத்தைத் திரும்பப் பெற போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
நியூ ஹுவிய் கிம் விடுத்த மிரட்டல் காரணமாக சொகுசுக் கப்பலின் பயணம் இரண்டு மணி நேரம் தடைப்பட்டது.
இதனால் கிட்டத்தட்ட 4,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
அனைவரையும் மிகத் தீவிரமாகப் பரிசோதித்த பிறகே கப்பலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
சொகுசுக் கப்பல் பயணத்துக்கு முன்பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட அதே மின்னஞ்சல் முகவரியையே போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்க நியூ பயன்படுத்தியிருந்தார்.
இதையடுத்து, அவர் அடையாளம் காணப்பட்டார்.
41 வயது சிங்கப்பூரரான நியூவுக்கு எதிரான தீர்ப்பு அக்டோபர் 27ல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.