வீட்டுப் பணிப்பெண்ணின் இடதுகால் சுண்டு விரலில் எலும்பு முறிவு ஏற்படும் வகையில் வீட்டின் படுக்கையறைக் கதவை வலுக்கட்டாயமாக மூடியதாக ஆடவர்மீது சந்தேகிக்கப்படுகிறது.
இவ்வாண்டு ஜூலை 3ஆம் தேதி மாலை 5 மணியளவில் பிடாடாரி பார்க் டிரைவில் இருக்கும் வீடமைப்பு வளர்ச்சி கழகத்தின் குடியிருப்பு ஒன்றில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது.
47 வயது சோமசன்மா எம். எஸ். வேலு எனும் அந்த ஆடவர்மீது பணிப்பெண்ணைத் தாக்கியதாக இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
மேலும், அப்பெண்ணின் தலையில் தன் கைப்பேசியைக் கொண்டு அவர் அடித்ததாகவும் சொல்லப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை டிசம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பணிப்பெண்ணை எலும்புமுறிவு ஏற்படும் வகையில் தாக்கிய குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் $20,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.


