தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தோட்டம் அமைக்க 350க்கும் மேற்பட்ட இடங்கள்

1 mins read
eb14b3f9-cb74-4f22-a1bb-58aba9ab9019
ஒவ்வொரு இடத்திற்கான வாடகை ஆண்டுக்கு 62.13 வெள்ளியாகும். இடத்தின் அளவு 2.5 மீட்டர் x 1 மீட்டர் இருக்கும்.  - படம்: தேசியப் பூங்­காக் கழ­கம்

சிங்கப்பூரில் உள்ள 15 பூங்காக்களில் தோட்டம் அமைக்க 350க்கும் மேற்பட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அந்தத் தோட்டத்தில் காய்கறிகள் வளர்க்கலாம். தோட்டம் வைக்க விரும்புபவர்கள் தேசியப் பூங்­காக் கழ­கத்தில் விண்ணப்பிக்கலாம்.

மார்ச் 19ஆம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி காலை 11.59 மணி வரை விண்ணப்பங்கள் அனுப்பலாம் என்று தேசியப் பூங்­காக் கழ­கம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) அறிக்கை வெளியிட்டது.

தோட்டத்திற்கான இடங்கள் ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, ஜூரோங் சென்ட்ரல் பூங்கா, ஜூரோங் ஏரிக்கரைப் பூந்தோட்டம், பொங்கோல் பூங்கா, அங் மோ கியோ நகரப் பூந்தோட்டம் ஆகியவற்றில் உள்ளன.

ஆக அதிகமான இடங்கள் ஜூரோங் ஏரிக்கரைப் பூந்தோட்டத்தில் உள்ளதாகத் தேசியப் பூங்­காக் கழ­கம் தெரிவித்தது.

2016ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் பூங்காக்களில் காய்கறிகளை வளர்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்குத் தோட்டக்கலை ஒதுக்கீடு திட்டம் என்று பெயரிடப்பட்டது. தற்போது இத்திட்டம் விரிவாக்கம் கண்டுள்ளது.

தோட்டம் வைக்க விருப்பப்படுபவர்கள் தோட்ட இடத்திற்கு வாடகைச் செலுத்தி அவற்றைப் பயன்படுத்தலாம்.

ஒவ்வொரு இடத்திற்கான வாடகை ஆண்டுக்கு 62.13 வெள்ளியாகும். இடத்தின் அளவு 2.5 மீட்டர் x 1 மீட்டர் இருக்கும்.

சிங்கப்பூரில் தோட்டம் அமைக்க 28 பூங்காக்களில் 2,400க்கும் மேற்பட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்