புக்கிட் பாத்தோக்கில் திங்கட்கிழமை (நவம்பர் 24) பிற்பகல் ஒரு மோட்டார்சைக்கிளும் ஒரு வேனும் சம்பந்தப்பட்ட விபத்தில் காயமுற்ற 23 வயது மோட்டார்சைக்கிளோட்டி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 5, புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 2 சந்திப்பில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து பிற்பகல் 2 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் தெரிவித்தன.
அந்தப் பெண் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தார்.
வேனை ஓட்டிய 69 வயது ஆடவர் விசாரணைக்கு உதவி வருவதாகக் காவல்துறை கூறியது.
எஸ்ஜி ரோடு விஜிலாண்டே ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி ஒன்று, போக்குவரத்துச் சந்திப்பில் அந்த மோட்டார்சைக்கிளோட்டி காத்துக்கொண்டிருந்தபோது பின்னால் இருந்து வந்த ஒரு கறுப்பு நிற வேன் அவர்மீது மோதுவதைக் காட்டியது.
இதனால் அந்த மோட்டார்சைக்கிளோட்டி சாலையில் தூக்கி வீசப்பட்டார்.

