ஈசூனில் விபத்து: ‘கோமாவில்’ துணைக்காவல்படை அதிகாரி

1 mins read
9a2dd0cd-8596-4148-9e4c-738d2dbd67e9
ஈசூனில் காரும் மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில், 27 வயது துணைக்காவல்படை அதிகாரி  காயம் அடைந்தார். - படம்: சிங்கப்பூர் ரோடு விஜிலன்டெ/ஃபேஸ்புக்

ஈசூனில் காரும் மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில், 27 வயது துணைக்காவல்படை அதிகாரி காயம் அடைந்தார். அவர் பெயர் முஹமது அஸ்ரியன். இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை ஈசூன் அவென்யூ 1க்கும் ஈசூன் ரோடு 81க்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் நடந்தது.

இந்த விபத்து குறித்து ஞாயிற்றுக்கிழமை காலை 9.35 மணிக்குத் தகவல் கிடைத்தது. காயமடைந்த அந்த அதிகாரி கூ டெக் புவாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

மேலும் அது, காயமடைந்த திரு அஸ்ரியன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநி­­னைவற்ற நிலை­யில் இருந்தார் எனத் தெரிவித்தது.

அவர் தற்போது மருத்துவமனையில் ‘கோமா’ நிலையில் உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளுக்குப் பின்பக்கம் வந்த வெள்ளை நிறக் கார் ஒன்று, இடப்பக்கம் நோக்கி காரைச் செலுத்தப்படும்போது ஒரு சிறிய வாகனத்தின் மீது இடிப்பதையும் அதனால் மோட்டார் சைக்கிளோட்டி கீழே விழுந்ததையும் சிங்கப்பூர் ரோடு விஜிலன்டேயின் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட காணொளியில் காண முடிந்தது.

கவனக்குறைவாக வாகனம் ஓட்டி கடுமையான காயத்தை ஏற்படுத்தியதற்காக 59 வயது கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
விபத்துகாயம்கைது