தமிழ் நாடகத்தில் நடித்த ரிச்சர்ட் லோ விருதுக்கு பரிந்துரை

1 mins read
4e33db76-6796-4f71-8c89-b4cfed088dfb
நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக மீடியாகார்ப் நடிகராக அனுபவமுள்ள ரிச்சர்ட் லோ, சிங்கப்பூரில் ஜப்பானிய ஆக்கிரமிப்பு பற்றிய நாடகம் ஒன்றில் கொடூர குணமுள்ள ஜப்பானிய ராணுவத் தளபதியாக நடித்துள்ளார். - படம்: மீடியாகார்ப்

சிங்கப்பூரில் இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய ஆக்கிரமிப்புக் காலத்தை சித்திரிக்கும் 1943 என்ற தமிழ் நாடகத்தில் பழம்பெரும் மீடியாகார்ப் நடிகரான ரிச்சர்ட் லோ, 72, கொடூர ஜப்பானியத் தளபதியாக நடித்துள்ளார்.

அவரது நடிப்பு இந்திய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கான பிரதான விழா என்ற விருது வழங்கும் நிகழ்வில் அவருக்கு விருது பெறும் வாய்ப்பை வழங்கியுள்ளது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான நடிப்பு அனுபவமுள்ள திரு லோ விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கான இந்திய விழா ஒன்றில் விருதுக்காகக் கடந்த பத்தாண்டுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ள முதல் இந்தியர் அல்லாத நடிகர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழா பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற உள்ளது. அது மீடியாகார்ப் பொழுதுபோக்கு ஒளிவழியான மீவாட்ச், யூடியூப், வசந்தம் ஆகியவற்றில் நேரலையாக இரவு மணி 9.00க்கு ஒளிபரப்பப்படும்.

அந்தத் தமிழ் நாடகத்தில் திரு லோ, ஜப்பானிய எதிர்ப்பாளர்கள் என்று அடையாளப்படுத்தப்படும் சிங்கப்பூரர்களைக் கொல்லும் ஜப்பானிய ராணுவத் தளபதியாக நடித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்