ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்தோர், தங்களுக்குக் கிடைத்த மறக்கமுடியாத நினைவுகளைப் பகிர்ந்து, சிங்கப்பூர் ஏர்லைன்சின் (எஸ்ஐஏ) இரண்டு பிஸ்னஸ் வகுப்பு பயணச்சீட்டுகளை வெல்லும் வாய்ப்பை அந்நாட்டுப் பயணத்துறைக் கழகம் வழங்குகிறது.
சிங்கப்பூரிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குச் சென்று வரக்கூடிய இந்த இருவழி விமானப் பயணச்சீட்டுகளை வெல்ல, பயணிகள் ஆஸ்திரேலியாவில் தங்களுக்குக் கிடைத்த மிகச் சிறந்த அனுபவத்தைப் பற்றி ஒரு சிறு குறிப்பை எழுதவேண்டும். அதனுடன் தொடர்புடைய ஒரு புகைப்படம் அல்லது காணொளியையும் இணையப் படிவம் வாயிலாக அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
‘டேக் மீ பேக் டு ஆஸ்திரேலியா’ எனப்படும் இந்தப் போட்டி மே 24ஆம் தேதி இரவு 11.59 மணி வரை இடம்பெறுகிறது. சிங்கப்பூரில் வசிக்கும் 18 வயது, அதற்கும் மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூர் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் இதில் பங்கேற்கலாம்.
வெற்றியாளர் ஒருவர் ஜூன் 5ஆம் தேதிக்குள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்குத் தொலைபேசி, மின்னஞ்சல் வாயிலாகத் தகவல் தெரிவிக்கப்படும்.
மேல்விவரங்களுக்கு https://contest.sph.com.sg/campaigns/take-me-back-to-australia/?ref=inline-article இணையப் படிவத்தைப் பெறலாம்.

