சட்டவிரோத ஒன்றுகூடல் உட்பட பல குற்றச் செயல்களுக்காகப் பலமுறை சிறைக்குச் சென்றுள்ள ஆடவருக்கு 2023ஆம் ஆண்டு ஆர்ச்சர்ட் சாலையில் நடைபெற்ற கலவரம் காரணமாகக் கூடுதல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆர்ச்சர்ட் சாலையில் நிகழ்ந்த அடிதடியில் 29 வயது முகம்மது இஸ்ரத் முகம்மது இஸ்மாயில் உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த திரு இஸ்ரத், டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவர் சுயநினைவு இழந்த நிலையில் இருந்தார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மாண்டார்.
புதன்கிழமையன்று (நவம்பர் 26) 35 வயது அப்துல் ரஹ்மான் கனி அப்துல் அஸீசுக்கு இரண்டு ஆண்டுகள், ஆறு மாதங்கள், மூன்று வாரச் சிறைத் தண்டனையுடன் மூன்று பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
வேறொரு தாக்குதல் வழக்கு தொடர்பாகப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தபோது 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதியன்று கான்கோர்ட் ஹோட்டல் அருகில் கனி கலவரத்தில் ஈடுபட்டார்.
கனி, 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.
தம்மீது சுமத்தப்பட்ட தாக்குதல், கலவரக் குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த வழக்குடன் தொடர்புடைய பலருக்கு தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது.
திரு இஸ்ரத்தை கத்தியால் பலமுறை குத்தியதாகக் கூறப்படும் 30 வயது அஸ்வின் பக்கன் பிள்ளை சுகுமாறன் மீது கொலைக் குற்றச்சாட்டு விதிக்கப்பட்டுள்ளது. அவர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

