முறையற்ற வகையில் நடந்துகொள்ளும் பயணிகளுக்குச் சிங்கப்பூர் வரும் விமானங்களில் இடமில்லை

முறையற்ற வகையில் நடந்துகொள்ளும் பயணிகளுக்குச் சிங்கப்பூர் வரும் விமானங்களில் இடமில்லை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

28 Nov 2025 - 7:20 pm

1 mins read

முறையற்ற வகையில் நடந்துகொள்ளும் பயணிகள் என்று அடையாளம் காணப்பட்டிருப்பவர்களுக்குச் சிங்கப்பூர் நோக்கி வரும் விமானங்களில் இடம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகையோருக்கான தடை உத்தரவு அடுத்த ஆண்டு ஜனவரி 30ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கு வழங்கப்படும் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) கூறியது.

முறையற்ற வகையில் நடந்துகொள்வோர் சிங்கப்பூர் வராமல் இருப்பதைத் தடுத்து, நாட்டின் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் இலக்கு என்று தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூருக்கு வர தடை விதிக்கப்பட்டவர்களுக்கும் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் சாங்கி விமான நிலையத்திலும் சிலேத்தார் விமான நிலையத்திலும் விமானச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்குப் அது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

செல்லுபடியான விசா, குறைந்தது ஆறு மாதங்கள் செல்லுபடியான பயண ஆவணம் போன்றவற்றை சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டவர்கள் வைத்திருக்க வேண்டும். இதுபோன்ற அடிப்படைத் தகுதி இல்லாதோருக்கும் எதிராகப் புதிய தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று ஆணையம் கூறியது.

எஸ்ஜி வருகை அட்டை, விமானப் பயணிகள் பட்டியல் போன்ற பயணிகள் தொடர்பான கூடுதல் விவரங்களைப் பயன்படுத்தி அபாயமுள்ள, முறையற்ற வகையில் நடந்துகொள்ளும் பயணிகளை, அவர்கள் சிங்கப்பூர் வந்தடையும் முன்பே ஆணையம் அடையாளம் காண்கிறது.

குறிப்புச் சொற்கள்