பிலிப்பீன்ஸ் அதிபரின் ஐந்தாவது சிங்கப்பூர் வருகை: கார் பந்தயத்தைக் காண்பார்

பிலிப்பீன்ஸ் அதிபரின் ஐந்தாவது சிங்கப்பூர் வருகை: கார் பந்தயத்தைக் காண்பார்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

07 Oct 2026 - 9:33 am

1 mins read

மணிலா: பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியர் சிங்கப்பூருக்கு ஐந்து நாள் வருகை மேற்கொண்டுள்ளார்.

புதன்கிழமை (அக்டோபர் 7) முதல் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) வரை அவர் இங்கு இருப்பார்.

திரு மார்க்கோஸ் மேற்கொண்டிருக்கும் ஐந்தாவது சிங்கப்பூர் வருகை இது.

அடுத்த ஆண்டு ஆசியான் தலைமைப் பொறுப்பை ஏற்க சிங்கப்பூர் தயாராகி வரும் நிலையில் முதலீடுகள், அணுசக்தி, அணுக்க ஒத்துழைப்பு ஒருங்கிணைப்பு ஆகியவை அவரது நிகழ்ச்சி நிரலில் உள்ள முக்கிய அம்சங்களாக உள்ளன.

பிரதமர் லாரன்ஸ் வோங்கின் அழைப்பை ஏற்று திரு மார்க்கோஸ் இந்த அதிகாரபூர்வ வருகையை மேற்கொள்கிறார்.

அக்டோபர் 9 முதல் 11 வரை நடைபெறும் ஃபார்முலா 1 சிங்கப்பூர் கிராண்ட் பிரீ கார் பந்தயத்தில் கலந்துகொள்ளவும் அவரை திரு வோங் அழைத்துள்ளார்.

பிரதமர் வோங், பந்தய வார இறுதியில் திரு மார்க்கோசுக்கு இரவு விருந்தளித்து உபசரிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் வட்டார முன்னேற்றங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.

இந்த கார் பந்தயம், சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த அரசாங்கத் தலைவர்கள், வர்த்தக நிர்வாகிகள் மற்றும் முதலீட்டாளர்களுடன் முறைசாரா முறையில் கலந்துரையாடுவதற்கான வாய்ப்புகளையும் திரு மார்க்கோசுக்கு வழங்கும் என்று பிலிப்பீன்ஸ் வெளியுறவுத் துறை உதவிச் செயலாளர் அனலின் ரடோனல் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்